மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேந்திரம் சுகுணேஸ்வரமலர்
வயது 586 மே, 1959 – 6 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். செங்குந்தா வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Köln ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் சுகுணேஸ்வரமலர் அவர்கள் 06-12-2017 புதன்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம்(உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரி- கைதடி) இராஜம்மா(அன்ரி) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அருள்நந்தி நாதன்(பிரபு) அவர்களின் அன்பு மனைவியும்,
யோகேஸ்வரமலர்(ஐக்கிய அமெரிக்கா), சாந்தமலர்(கொழும்பு), ரவீந்திரநாதன்(அன்ரி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சோதிரெட்ணம்(ஐக்கிய அமெரிக்கா), மின்னா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுகன்ஜா(பிரான்ஸ்), சரண்யா(ஐக்கிய அமெரிக்கா), சஞ்சீவன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சித்தியும்,
அஸ்வின்(கனடா), மிதுஷா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
அக்ஷனா(இலங்கை), அஜிந்(பிரான்ஸ்), சமைரா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-12-2017 வியாழக்கிழமை அன்று Räume des Abschieds, Frankfurter Straße 308, 51103 Köln, Germany எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

