1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி பூரணானந்தம்பிள்ளை
வயது 7131 அக்டோபர், 1947 – 29 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- புளியங்கூடல், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல் மகாமாரி அம்மன் கோவிலை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜேஸ்வரி பூரணானந்தம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!
உங்களை உருக்கி எங்களை
உருவாக்கிய உன்னதமே!
உயர்வான வாழ்வுதனை எமக்கு
உளமார அமைத்திட்டீர்கள்!
உங்களை வாழவைக்கும் காலம் இனி
என நாம் மகிழ்வுற்று இருக்கையிலே
காலனவன் செய்த சதி இதுவோ?
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

