ஆறுதல்

மரண அறிவித்தல்

இராஜேஸ்வரி தங்கத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராஜேஸ்வரி தங்கத்துரை

வயது 7511 ஜூன், 1944 – 27 ஜூன், 2019

பிறந்த இடம்
அல்வாய் வடக்கு
வாழ்ந்த இடம்
ஆவரங்கால், திருகோணமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வடமராட்சி அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் மற்றும் திருகோணமலை லிங்கநகர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி தங்கத்துரை அவர்கள் 27-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கத்துரை(இ.போ.சபை) அவர்களின் அன்பு மனைவியும்,

சேசவன்(தொழில்நுட்ப உத்தியோகத்தர் கட்டடங்கள் திணைக்களம்- திருகோணமலை), Dr. சபேசன்(பல்வைத்திய நிபுணர் - கனடா), வாசீகன்(ஆசிரியர்- புனித சூசையப்பர் கல்லூரி திருகோணமலை), ஆனந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வனிதை, வத்சலா(கனடா), Dr. நிகேதா(அயுள்வேத வைத்தியசாலை- நகராட்சி மன்றம் திருகோணமலை), முரளிதரன்(பொறியிலாளர்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,

அபிநயன், அக்சயன், காருண், ஓவியா, கவின், வியாசன், வைஷாலி, ஹரிஸ், ஹரிணி, சேரன், நரேன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.30 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த வடமராட்சியில், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த அல்வாய் வடக்கில் 11/JUN /1944 இல் இராஜேஸ்வரி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் அறிவு நிறைந்த ஆண் மகனான இலங்கை போக்குவரத்து சபை திரு. தங்கத்துரை அவர்களைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சேசவன், Dr.சபேசன், வாசீகன், ஆனந்தி போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து வனிதை, வத்சலா, Dr.நிகேதா, முரளிதரன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து அபிநயன், அக்சயன், காருண், ஓவியா, கவின், வியாசன், வைஷாலி, ஹரிஸ், ஹரிணி, சேரன், நரேன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

அத்துடன் இவர் சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 27.06.2019 இல் 75 வயதில் திருகோணமலை லிங்கநகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்

அல்வாய் தந்த அழகிய அன்பே
அன்னம் போல் வெண்மை உருவே
கன்னக் குழிச் சிரிப்பின் அழகே
எண்ணம் நிலைத்து இன்பம் கண்டு
விண்ணை அடைந்து விடை பெற்றீரே
கண்ணில் நீர் வழிய தவிக்கிறோம்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.