மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி தங்கராஜா
Retired Teacher
வயது 8122 ஜனவரி, 1938 – 9 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, London, வரணி, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வரணி, திருகோணமலை தம்பலகாமம், காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி தங்கராஜா அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற M S தங்கராஜா(Retired Railway Head Guard) அவர்களின் அன்பு மனைவியும்,
தயானி, ரஜந்தினி, ரேணுகா, மோகனவேல், தேவிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரி, பரநிருபசிங்கம், தர்மகுலசிங்கம், சிவராஜசிங்கம், பாஸ்கரலிங்கம், சசிதேவி, காலஞ்சென்ற கமலவாணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டேவிட், துஷ்யந்தன், ரவிசங்கர், தவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாக்கியம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
டவினா, ஸ்டெபானா, அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
அனைவரிடம் அன்பாக பழகுபவரும், ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவருமான இராஜேஸ்வரி தங்கராஜா அவர்களின் வாழ்க்கை வரலாறிது...
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் காசிநாதர் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியாக இராஜேஸ்வரி அவர்கள் 22/JAN/1938 இல் பிறந்தார். யோகேஸ்வரியின் பாசமுள்ள தங்கையாகவும், பரநிருபசிங்கம், தர்மகுலசிங்கம், சிவராஜசிங்கம், பாஸ்கரலிங்கம், சசிதேவி, ஆகிய சகோதரங்களுக்கு பொறுப்புள்ள சகோதரியாக வளர்ந்த இவர், பள்ளிப்படிப்பை முடித்ததோடு கல்லூரியிலும் பயின்றார்.
முழுக் கதையையும் வாசிக்க
கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஆசிரியராக பணிபுரிய தொடங்கிய இவர், 1969 ஆம் ஆண்டு சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனானதங்கராஜா அவர்களை பெற்றோர் நிச்சயித்தபடி மணமுடித்தார். இல்லற வாழ்வை இனிமையாக வாழ்ந்ததன் பயனாக தயானி, ரஜந்தினி, ரேணுகா, மோகனவேல், தேவிகா எனும் அன்பு செல்வங்களை பெற்றெடுத்த இவர் 2013 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் குடிபெயர்ந்து வாழத் தொடங்கினார்.
தன் பிள்ளைகளைகளுக்கு நல்ல கருத்துக்களை போதனைகளாக கூறி வளர்த்த இவர், அவர்கள் திருமண வயதை எட்டியதும் டேவிட், துஷ்யந்தன், ரவிசங்கர், தவாணி ஆகியோர்களை அவர்தம் வாழ்க்கை துணைகளாக தேர்ந்தெடுத்து மணமுடித்து வைத்தார். தமிழ் இலக்கியங்கள், தேவாரம் உள்ளிட்ட புத்தகங்களை வாசிப்பதை தனது பொழுதுபோக்காக கொண்டிருந்த இவர் கவிதை, கட்டுரைகள் எழுதுவிதில் அலாதி ஆர்வம் கொண்டு விளங்கினார். தனது பேரப்பிள்ளைகளான டவினா, ஸ்டெபானா, அஷ்வின் ஆகியோரிடமும் அதிக அன்பு வைத்திருந்தார்.
வாழ்க்கையின் பல நிலைகளை கண்ட இவர் தன் மீது பாசம் கொண்டிருந்த அனைவரையும் விட்டு 09.10.2019 இல் தனது 81 வயதில் காலமானார்.
அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

