ஆறுதல்

மரண அறிவித்தல்

இராஜினி சண்முகநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராஜினி சண்முகநாதன்

இளைப்பாறிய ஆசிரியை யாழ். கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம்

வயது 6022 அக்டோபர், 1958 – 1 ஜூன், 2019

பிறந்த இடம்
நல்லூர் தெற்கு
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜினி சண்முகநாதன் அவர்கள் 01-06-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பொன்னுத்துரை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பையா சண்முகநாதன்(இளைப்பாறிய கணித ஆசிரியர் - கொ/ விபுலானந்த த.ம.வி தெமட்டகொட) அவர்களின் அன்பு மனைவியும்,

நிலக்‌ஷன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற லலிதா, மற்றும் பத்மினி, இரவீந்தினி, விஜயா, ஜெயக்குமார், சாந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகலிங்கம், இரட்ணலிங்கம், பேரம்பலம், புஸ்பநாதன், மல்லிகா, சாந்தகலாதேவி கனகலிங்கம், சண்முகரட்ணம், உத்தமராணி மற்றும் காலஞ்சென்ற கனகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அகிலன், விமலன், சாரங்கன், கிருஷாகரன், கௌரிசங்கர், சுகித்தா, நிரோஷாந்த் ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,

இஷானி, ஷிவானி, அஸ்வின், ஹரிஷான், இராகவி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 03-06-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும் நன்கு படித்த மக்களைக் கொண்டதும், பிரசித்தி பெற்ற முருகன் ஆலயம் அருள்புரியும் இடமும் நெல்வயல்கள்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த நல்லூர் தெற்கில் பொன்னுத்துரை மகேஸ்வரி தம்பதிகளுக்கு அன்புப் புத்திரியாக இராஜினி அவர்கள் 22/Oct/1958 ஆம் ஆண்டில் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் லலிதா, பத்மினி, இரவீந்தினி, விஜயா, ஜெயக்குமார், சாந்தகுமார் போன்ற அன்புச் சகோதரங்களுடன் குறும்புகள் செய்து வளர்ந்து நன்கு படித்து உயர்நிலை அடைந்ததுடன் சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அறிவு மகனான கணித ஆசிரியர் சுப்பையா சண்முகநாதன் அவர்களைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து நிலக்ஷன் எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று வளர்த்து மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயத்தில் ஆசிரியையாக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,அமைதியும் சாந்தமும் பொறுமையும் குறையாக் கருணையும் மன்னிப்பும் கொண்டு விளங்கினார். சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன்,பிள்ளை, உற்றார்,உறவினர் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 01.06.2019 இல் 60 வயதில் கொழும்பில் உள்ள வெள்ளவத்தையில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"நல்லூர் மண்ணின்
......நற் புதல்வியே
நற் பண்பு கொண்ட
.......நல் ஆசிரியையே
இன்ப மனமே
......இனிமை உள்ளமே
இமைமூடிப் போனீர்
......இயம்பி அழவைத்து"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.