மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராஜ்மோகன் திருச்சிற்றம்பலம்
வயது 3610 ஜூன், 1979 – 12 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- Mitcham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை கொண்டைக்கட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வதிவிடமாகவும் கொண்ட ராஜ்மோகன்(வசந்தன்) திருச்சிற்றம்பலம் அவர்கள் 12-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திருச்சிற்றம்பலம்(AT மணி) தெய்வேந்திரராணி(தெய்வா) தம்பதிகளின் அன்பு மகனும், மதியழகன் சரோஜாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நித்தியா அவர்களின் அன்புக் கணவரும்,
காமினி, ராஜ்குமார், சசிகலா, சாந்தினி, பிரேமிளா, ராஜன், ராஜ்பாபு, கமல்ராஜ், ராகவன், காலஞ்சென்ற தியானவடிவேல், சுபதினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவச்செல்வம்(கனடா), நந்தன்(லண்டன்), தர்ஷன்(இலங்கை), நீரஜா(பெல்ஜியம்), அனிதா(இந்தியா), தனுஜா(லண்டன்), சர்மிளா(இந்தியா), ஜோதிலெட்சுமி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கலைவாணி, சரவணன், லாவண்யா, ஆதவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிசாந்தினி, புவிராஜ், சுபன்ராஜ், குணசிகா ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும்,
தருண், கிரிசிகா, அக்சிகா, சாய்ராஜ் ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-04-2016 புதன்கிழமை அன்று லண்டனில் இருந்து எடுத்து செல்லப்பட்டு பின்னர் 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் திருச்சியில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழும் வயதிது வந்திடு வசந்தா....
போகும் வழியெங்கும் விழி தேடுது உன் முகம்.
ஆழக்கடல் கடந்தும் உன் அன்னையை காணுவேனென்றாயே- இன்று
அவள் நிலையெண்ணி ஓர் முறையேனும் வாராயோ!!!
பள்ளி வயசினிலே பல சுமை சுமந்தவனே
சொல்லிலடங்காது உன் வாழ்வின் வலிகளினை
சொல்லிலும், செயலிலும் உன் நேர்மை ஊரறியும்
கல்கூட தூசாகும் உன் கடின உழைப்பறிந்து
தனையவள் தனையே மெய்ப்பொருளாக்கி
பேரன்புக்காதலால் தன் உயிர் வார்த்து, வளர்த்த
மல்லிகைச்செடியினை அரும்பாகி, மொட்டாகி மலரும் முன்பே
மண்ணை விட்டு பிரித்த மரண தேவன்
மனைவி நிலைபற்றி எண்ணிடவும் மறந்தானோ
உதவியெனவருவோர் வார்த்தை வெளி வரும்முன்பே
அவருள்ளமறிந்து தீர்ப்பாய் உன் ஈகைக் கரங்கொண்டு
தீயோரெனினும் இன்முகம் காட்டும் உன் குணம்- இன்று
தீக்குள் வேகும் இதயங்கள் கண்டும் வாய்மூடிக்காப்பதேன் மௌனம்
சிக்கித்தவிக்கிறோம் மொத்தமாய் சித்தமிழந்து
ஒற்றைக்கணமேனும் மீண்டெழுந்து வாராயோ
வாழும் வயதிது வந்திடு வசந்தா....
வாழும் வயதிது வந்திடு வசந்தா....
வீட்டு முகவரி:
76 Bond Rd,
Mitcham,
Surrey CR4 3HF,
UK.
திருச்சி முகவரி:
வசந்தநகர்,
இல. 05 , 8 வது க்றொஸ்,
ஜெயா விஸ்தரிப்பு,
கரு மண்டபம்,
திருச்சி,
இந்தியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

