ஆறுதல்

மரண அறிவித்தல்

இராமலிங்கம் கதிரமலை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராமலிங்கம் கதிரமலை

வயது 776 மார்ச், 1938 – 17 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
சரவணை
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை சரவணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கதிரமலை அவர்கள் 17-02-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

வசந்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற வசந்தன், கண்ணன்(கொழும்பு), சுகி(கனடா), லவன்(கொழும்பு), குசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, புவனேஸ்வரி, சாந்தலிங்கம், மலைமாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற விஜயகுமார்(பிரான்ஸ்), சுஜி(கொழும்பு), சிவகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான புஸ்பவதி, சிறி(இலங்கை), திருணா(சுவிஸ்), விஜியா, மங்கா(இலங்கை), பாலா(கனடா), காலஞ்சென்ற தனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நாகராசா, அன்னலட்சுமி, பாலசுப்பிரமணியம், இராசதுரை, சிவபாக்கியம்(இலங்கை), சிவமணி(சுவிஸ்), சந்திரசேகர்(இலங்கை), வரதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

டிப்தியா, கபிலன், அபிநயா(பிரான்ஸ்), டிலோசன், அட்சயா(இலங்கை), சுஜீவன், ஷாரங்கன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் No.888/10, Maradana Road, Punchi Borella, Colombo- 08 என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் மாதம்பிட்டி கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.