மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமலிங்கம் சிவபாலன்
முன்னாள் யாழ் வர்த்தகர்
வயது 6512 அக்டோபர், 1950 – 13 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ், வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிசை தற்காலிக வதிவிடமாகவும், வவுனியாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சிவபாலன் அவர்கள் 13-04-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பேரின்பநாதன் மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பவனிதா அவர்களின் பாசமிகு கணவரும்,
அனுஷா(கனடா), சசிரேகா(இலங்கை), மயூரன்(பிரான்ஸ்), சந்திரிகா(இலங்கை), செந்தூரன்(கனடா), சங்கீதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானஸ்கந்தன்(கனடா), வசந்தகுமார்(அமெரிக்கா), துசி(இலங்கை), ராஜ்குமார்(இலங்கை), கணேஷ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலாதேவி(கனடா), செல்லம்மா(கனடா), கருணாநிதி(கனடா), சூரியகலா(கனடா), சிவகுமார்(ஜெர்மனி), மங்களேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற மோகனதாஸ், புஷ்பராணி(ஜெர்மனி), திருச்செல்வம்(ஜெர்மனி), புஷ்பலதா(இலங்கை), தியாகராஜா(கனடா), ஜெகநாதன்(கனடா), கலாநிதி(கனடா), விஜயகுமாரன்(கனடா), காலஞ்சென்ற சரஸ்வதி(கோகிலம்), தமிழ்வாணி(ஜெர்மனி),கேதீஸ்வரநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேவி(இலங்கை), நாகஸ்ரீதரன்(ஜெர்மனி), சகுந்தலா(ஜெர்மனி), உதயகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
ராகுல்(கனடா), அஷ்வினி(கனடா), யதுஷன்(இலங்கை), கனிஷ்கா(இலங்கை), விதுஷா(இலங்கை),வர்ஷா(இலங்கை), ஆருஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 49/3, கோவில் வீதி,
1வது லேன்,
குருமன்காடு,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

