ஆறுதல்

மரண அறிவித்தல்

இராமலிங்கம் சிவலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராமலிங்கம் சிவலிங்கம்

எழுத்தாளர் உதயணன்

வயது 8425 மே, 1935 – 23 ஜூலை, 2019

பிறந்த இடம்
உடுவில்
வாழ்ந்த இடம்
பின்லான்ட், Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பின்லாந்து, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சிவலிங்கம் அவர்கள் 23-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் சிதம்பரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கலாதரன், ஸ்ரீதரன் , கெங்காதரன், பவானி, பாமினி, சுதாசினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிரஞ்சலா, முல்லை, செல்வி, தயாளன், நேசானந்தர், நிமலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், பூமணி, இராஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான இலங்கநாதன், புலேந்திரன் மற்றும் கதிர்காமநாதன், விஜயலட்சுமி, கனகசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நிக்கில், கிர்ஷான், துர்க்கா, சேரன், தீபன், விநோதாரணி, சினேகலதா, சான்றோன், சேந்தன், நவின், சகானா, அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

பின்லாந்தின் தேசிய காவியமான கலேவலா(kalevala) வை, தமிழாக்கம் செய்து தமிழிற்கு புகழ்சேர்த்த, இராமலிங்கம் சிவலிங்கம் அவர்கள் 23/07/2019 அன்று கனடா ரொறொன்ரோவில் காலமானார்.1983 காலப்பகுதியில் பின்லாந்தில் குடியேறியவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர். சிவலிங்கம் அவர்கள், ஈழத்தில் வாழ்ந்த காலப்பகுதியில், வீரகேசரி, சுதந்திரன் போன்ற நாளிதழ்களிலும், உதயணன் என்ற புனைபெயரில், கட்டுரைகள் , சிறுகதைகள் போன்றவற்றையும் எழுதிய படைப்பாளியாவார். 1983தொடக்கம் 2008 வரை பின்லாந்தில் வசித்தவர்.அதன் பின்னர் கனடாவில் குடியேறினார் அக்காலப்பகுதியில் தாய்வீடு என்ற பத்திரிகையில் தனது படைப்புக்களை பதிவு செய்தார். தாய்வீடு பதிப்பகத்தின் அனுசரணையில், பின்லாந்தின் பசுமை நினைவுகள் என்ற நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவர் ஒரு மூத்த எழுத்தாளர்.
" தேடிவந்த கண்கள் "
***********************
1960 ல் கல்கி நடத்திய ஈழத்துச் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை இது.
" உதயணன் "
**************
இவரது இயற் பெயர்.
ஆர். சிவலிங்கம். (இராமலிங்கம் சிவலிங்கம்).
' இளம்பூரணன் ' என்பதும் இவரது புனைப்பெயரே.

முழுக் கதையையும் வாசிக்க

25/5/1935 ல் உடுவிலில் பிறந்தவர். காங்கேசன்துறை மெ.மி. பாடசாலை., பரமேஸ்வராக்கல்லூரி, அநுரதபுரம் தமிழ் மகாவித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவர். 55/57 ஆம் ஆண்டுவரை நாவலப்பிட்டி கதிரேசன் பாடசாலையிலும். கதிரேசன் கல்லூரியிலும் ஆங்கில உதவி ஆசிரியராக இருந்தவர். 57 ல் அரச எழுதுவினைஞராகி கொழும்பு சமூகசேவைத் திணைக்களம், புத்தளம் கச்சேரி, யாழ் கல்வி அலுவலகம், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றில் கடமையாற்றி 1979 ல் ஓய்வு பெற்றவர்.

இவரது முதற் படைப்பு கவிதை. அச்சேறிய முதற்கதை ' தியாகி' இது வீரகேசரியில் பிரசுரமானது. கலைச்செல்வி, தினகரன் குமுதம், அல்லி, தமிழோசை போன்றவற்றில் இவர் பலகதைகள் எழுதியுள்ளார். இவர் சுதந்திரன் பண்ணையைச் சேர்ந்தவர். அதில் அதிகமான கதை எழுதியவர் இவரே. தெருவிளக்கு, கீழ்சாதி புராணம், என்ன உலகமடா இது. ஒருநாள் இன்பம் உட்பட 17 கதைகளை எழுதியிருக்கிறார். கவிஞர், சிறுகதையாளர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர். என பல்துறையாளர்.

இவரது நூல்கள் :
* கலேவலா ( பின்லாந்தின் தேசிய காவியம். எழுதியவர் அலஸ்கோ பார்பொலா.
பின்னிஸ் மொழியிலிருந்து தமிழ் செய்யுளாக.1994 ல். 1999.ல் தமிழ் உரைநடையாக.)
* பொன்னான மலரல்லவோ. ( நாவல் 1995.வீரகேசரி பிரசுரம்)
* அந்தரங்க கீதம் ( நாவல் 1996.வீரகேசரிபிரசுரம் )
* உங்களின் தீர்ப்பு
* பிரிந்தவர் பேசினால். ( சிறுகதைகள் இரு தொகுப்புகள் 2010 மணிமேகலை பிரசுரம்)
* பின்லாந்தின் பசுமை நினைகள் ( கட்டுரை. 2015. கனடா தாய்வீடு பதிப்பகம்.)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.