மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமலிங்கம் விஸ்வலிங்கம்
நிர்வாக அதிகாரி(AO) மஸ்கன்ஸ் நிறுவனம்- கொழும்பு, முன்னாள் பணிப்பாளர்- தொழிற்துறைத் திணைக்களம் வடமாகாணசபை, புனர்வாழ்வு மற்றும் புனருத்தாபன திணைக்களம் வடகிழக்கு மாகாணசபை
வயது 6713 மே, 1950 – 3 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- புலோலி தெற்கு
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புலோலி தெற்கு உபயகதிர்காமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் விஸ்வலிங்கம் அவர்கள் 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தங்கரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேல்முருகு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. தயாளினி, Dr. தர்ஷினி(தேசிய வைத்தியசாலை- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. நடராஜா(பிரித்தானியா), Dr. மலர்ராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. சசிகுமார்(மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை), Eng. செல்வபாலன்(Idieal Engineering(Pvt) Ltd) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்தோஷ், பிருந்தேஷ், ஜிதேஷ், அக்ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 04-04-2018 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரையும் , 05-04-2018 வியாழக்கிழமை மு.ப 09:00 முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No.41-2/6, 42 Lane,
Wellawatte,
Colombo - 06.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

