மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமமூர்த்தி அருந்தவநாதன்
வயது 7413 பிப்ரவரி, 1945 – 30 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- நீர்வேலி, மயிலிட்டி, இந்தியா, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, மயிலிட்டி, இந்தியா, கனடா ஆகிய இடங்களில் வசிப்பிடமாகவும் கொண்ட இராமமூர்த்தி அருந்தவநாதன் அவர்கள் 30-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமமூர்த்தி அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், மயிலிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற வன்னித்தம்பி, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னத்தங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
அமுதா(கனடா), அகிலன்(பிரான்ஸ்), அபிராமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேந்திரன்(கொலண்ட்), சந்திரசேகரம்(சுவிஸ்), கணேசமூர்த்தி(பிரான்ஸ்), சறோயினிதேவி(இலங்கை) மற்றும் காலஞ்சென்ற குகன், பவளன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற அருள்நேசன், ஜெயப்பிரகாஷ்(பிரான்ஸ்), சிவரூபா(பிரான்ஸ்), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கலாயோகி(கொலண்ட்), விமலாகாந்தி(சுவிஸ்), விஜிதா(பிரான்ஸ்), விஜயரத்தினம், தெய்வராணி, புஸ்பராணி, சுப்பிரமணியம், புஸ்பதேவன், செல்வராணி, சிவாபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேவி அவர்களின் அன்புப் பெறாமகனும்,
இராசரத்தினம், செல்லத்துரை, ஈஸ்வரி, ஜெயலட்சுமி, காலஞ்சென்ற சிவசம்பு, கந்தையா ஆகியோரின் அன்புச் சகலனும்,
லக்ஸ்மிப்பிரியா, ரகுராம்(கொலண்ட்), வினிதா, தனுசன்(சுவிஸ்), யதுர்சனா, சித்தனா, விதுசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
பரன், இளவேணி, குட்டி, வினி, தாஸ் ஆகியோரின் அன்பு மாமனும்,
பிருந்தா(கனடா), அஸ்மிதா, அஸ்விகா, அஸ்வின், அக்சயா, அபிஸ்னா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகு நிறைந்த இடமும்,நெல்வயல்கள்,வாழைத்தோட்டம்,புகையிலைத் தோட்டம்,மிளகாய்,வெங்காய வயல்கள் மரக்கறித்தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகான நீர்வேலி வடக்கில் 13/FEB/1945 இல் இராமமூர்த்தி அன்னலட்சுமி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் அருந்தவநாதன் அவர்கள் மகேந்திரன், சந்திரசேகரம், கணேசமூர்த்தி, சறோயினிதேவி, குகன், பவளன் ஆகிய உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் மயிலிட்டியைச் சேர்ந்த வன்னித்தம்பி கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் சின்னத்தங்கம் அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து அமுதா, அகிலன், அபிராமி ஆகிய அழகுப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் மிகமிக எளிமையானவராகவும்,வெளிப்படையாக பேசுவராகவும்,வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கியதுடன், நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 30.04.2019 இல் 74 வயதில் கனடாவில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"வீர மகனே
......பாச உறவே
நீர்வேலி மைந்தனே
.....உதவிடும் செம்மலே
உன் முகம் காண
......ஏங்கிடும் உறவுகள்
கலங்கி அழுது
....... தவிக்கிறோம் நாம்"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

