மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரமேஷ்வரன் மார்க்கண்டு
வயது 5118 மார்ச், 1968 – 14 மே, 2019
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- Saarbruecken, Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலை பதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரமேஷ்வரன் மார்க்கண்டு அவர்கள் 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வரதராஜா இராஜேஸ்வரி(அச்சுவேலி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கல்பனா அவர்களின் அன்புக் கணவரும்,
ரமீற்ரா, லாருஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரேஸ்வரன்(ஜேர்மனி), நாகேஸ்வரி, கேதீஸ்வரன், அழகேஸ்வரன், லோகேஸ்வரன், இராஜேஸ்வரி, மகேஸ்வரன், புஸ்பமாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார், காஞ்சனா, கஜினா, அல்லிராணி(ஜேர்மனி), நாகேந்திரன், செல்வராணி, பவானி, அஜந்தா, இராசையா, பாமா, சந்திரபோஸ், சோபனா, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதா(சுவிஸ்) அவர்களின் அன்புச் சகலனும்,
சிவஞானம், தவமணி,சிவபாலன். சிவராஜா, சரோஜா, மலர், ரஞ்சிதம், விமலா, மனோ, வரதன், ராசகுமார், அனுகாவதி, நேசராசா, நந்தினி, விஜயன், வசந்தினி, பிரமேராசா, லதா, ராதை, புஷ்பராஜா, ஜெயா, ரங்கன், ரதி, ரகு, ரமணன், லஜி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய இடமும்,நெல்வயல்கள்,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த அரியாலையில் மார்க்கண்டு யோகம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக ரமேஷ்வரன் அவர்கள் 18/Mar/1968 இல் அழகு நிறைந்த இவ் ஊரில் சந்திரேஸ்வரன், நாகேஸ்வரி, கேதீஸ்வரன், அழகேஸ்வரன், லோகேஸ்வரன், இராஜேஸ்வரி, மகேஸ்வரன், புஸ்பமாலா போன்ற உடன்பிறப்புகளுடன் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் வரதராஜா இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகள் கல்பனா அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ரமீற்ரா, லாருஷன் ஆகிய அற்புத பிள்ளைகளை ஈன்றெடுத்து பாதுகாத்து வளர்த்ததுடன், மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் ரமேஷ் என அன்பாக அனைவராலும் அழைக்கப்படும் இவர் எப்போதும் புன்னகை முகத்துடன்,நகைச்சுவையாக பேசும் குணம் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார் இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,சகோதரங்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 14.05.2019 இல் 51 வயதில் கனடா உள்ள Scarborough நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
அரியாலையில் உதிர்த்த
......அற்புத உள்ளமே
அன்பாக வாழ்ந்து
.......உயர்ந்த உறவே
அஞ்சா உறவே
.......ஒளிரும் விளக்கே
அனைந்தது வாழ்வு
.......சிதைந்தது மனசு
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

