மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமு கந்தவனம்
ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்
வயது 7512 ஏப்ரல், 1941 – 3 மே, 2016
- பிறந்த இடம்
- இயற்றாலை
- வாழ்ந்த இடம்
- கண்டாவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்டாவளை புளியம் பொக்கணைச்சந்தி பெரியகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராமு கந்தவனம் அவர்கள் 03-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இராமு தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சங்கரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னத்தங்கம் அவர்களின் பாசமிகு கணவரும்,
திரவியவதனி(வசந்தா- வவுனியா), ஜெகதீஸ்வரன்(ஜெகன்- லண்டன்), ஜெயவதனி(செல்வி- லண்டன்), ஜெயபவானி(பவுன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயப்பிரதாப்(சேகர்- வவுனியா), நாகராஜா(லண்டன்), சரவணபவன்(லண்டன்), கெளசல்யா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அர்ச்சனா கோகுலன்(லண்டன்), ஜனார்த் மதுரா(பிரான்ஸ்), மனோஜ் ரஜின்தா(வவுனியா), ஆர்த்தி(வவுனியா), நிருஷிகா, தனுஷிகா, கபிசன், கபிசனா, அபிசேகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
யதுகுலன், தரணியா(லண்டன்), அட்சரன், சேதுரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2016 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரியகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

