2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராமு சிந்தாமணி
வயது 837 அக்டோபர், 1935 – 19 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த ராமு சிந்தாமணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓர் உணர்வான ஒற்ரை சொல் அம்மா
உன் அன்பின் கதகதப்பும்
உன் வலிக்காத தண்டனையும்
இனி யாராலும் தரமுடியாதம்மா..
அம்மா? என்று குரல் எழப்புகிறோம்
ஆனால்... பதில் இல்லையே!
நீங்கள் பிரியில்லையம்மா...
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அம்மா…
எங்கள் அன்பு தாயே!
எங்கள் ஆசை அம்மாவே
ஆண்டு இராண்டு மறைந்து போனாலும்
எப்பொழுதிலும் என்றும் ஆறாத
துயரத்தில் ஆழ்ந்து இருக்கின்றோம் அம்மா...
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் உரும்பிராயில் 07/OCT/1935 இல் திரு.பொன்னம்மா நாகலிங்கம் தம்பதிகளின் அருமை மகளாய் சிந்தாமணி அவர்கள் முத்துலிங்கம், பூரணகாந்தி, பூப்பிள்ளை, உலகேஸ்வரி, மனோன்மணி, கமலாதேவி, சோதிலிங்கம், விஜயதாசன் போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு. ராமு என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சாந்தபவானி, குமார், சாந்தரூபன், ராஜீ போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து சிவகுமாரன், ராணி, சாந்தி, அனுராதா என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து சிவரஞ்சன்-யசிதா, தர்ஷினி-ஸ்ரிவன்சன், ரம்யா, ரமேஸ், நேதன், அக்சயா, பிரதீபன், பிரசாந்தன், பிரசாந், பிரவீன் போன்ற பேரப்பிள்ளைகளுடனும் சாய்பிரவி,ஜானுஷ்,ஹன்சிகா எனும் பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கியதுடன் சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 19.07.2019 இல் 83 வயதில் கொழும்பில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
உரும்பிராய் மண்ணின்
உன்னத உள்ளமே
எறும்பு போல்
சுறுசுறுப்பாக வாழ்ந்து
கரும்பென
தித்திப்பாகி
காலத்தில் உயர்ந்து
மனத்தினில் நிலைத்தீர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

