1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசா சிவலிங்கம்
வயது 7226 பிப்ரவரி, 1947 – 19 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- கரந்தன், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கரந்தன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசா சிவலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நினைவு...!
எங்கள் அன்புத் தந்தையே!
ஓராண்டு எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை
ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் அப்பா!
உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது
குடும்பம் என்ற அரிய தெய்வீக பந்தத்துள்
எம் காவற் தெய்வமாக இருந்து
சதா குடும்பத்தின் மீது கண்ணும் கருத்துமாக,
உயரிய அன்பாக, சிறப்பான ஒரு உழைப்பாளியாக,
சுறுசுறுப்பாளனாக, திடகாத்திரம், நம்பிக்கை என்று
எது வேண்டுமோ அத்தனையும் நிறைந்து
காணப்பட்ட எம் தெய்வமே !
இத்தனை பாக்கியங்களும் நிறைந்திருந்தது
எம்மை ஏங்கவிட்டு விரைவில் பிரியவென்றா ?
என்று நினைத்து நினைத்து வருந்துகிறோம் !
கண்ணிலும் மேலாகப் போற்றி
வளர்த்த பிள்ளைகள், குறையறியாமல்
நேசித்த மனைவி, பிள்ளைகளை போல நேசித்த மருமக்கள்,
கடவுளாய் நேசித்த பேரப்பிள்ளைகள் மற்றும்
சுற்றம் மீளாத்துயரில் கலங்குகிறோம் !
என் செய்வோம் விதியை நோகிறோம் !
உங்கள் நினைவு என்றும்
பசுமரத்தாணிபோல் நாம்
வாழும்வரை எம்மோடிருக்கும் !
அதுவரை உங்களின் ஆத்மசாந்திக்காக
பிரார்த்திப்போம்
ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!
உங்கள் நினைவால் வாடும் மனைவி,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்…
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்.உரும்பிராயில் புகழ் பூத்த சீமான் திரு.இராசா அவர்தம் பாரியார் சவுந்தரம் அவர்களின் அருமைப் புத்திரனாக 26/FEB/1947 ஆம் ஆண்டில் திரு.சிவலிங்கம் அவர்கள் பரமேஸ்வரி, துரைசிங்கம், நாகரத்தினம், தர்மலிங்கம், நாகேஸ்வரி போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடன் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன் திரு.பொன்னுத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகள் குணேஸ்வரி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக கவிதாஸ், றவிதாஸ், றஜீவன், சுஜீவன், துஜித்தா போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்த்து ரேகா, கிரியா, திசந்தினி, கார்த்திகா, நிமல்ராஜன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து கீர்த்தி, கவிநயா, அபிசா, அபிநாஸ், அஸ்வின், சஜானா, சகீரா, சயந்தவி, அனுஜன், அபிநயா, நிமஷா, நிதுஸ் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கிய இவர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன், நல்லுள்ளம் நிறைந்தவராக விளங்கியதுடன் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார்.இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார்,உறவினர் நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 19.07.2019 இல் 72 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
"புன்னகை முகமே
......புன் சிரிப்பே
இன்மொழிப் பேச்சே
......இளமை உருவே
இரக்க மனமே
...... இளம் தென்றலே
சிறக்க வாழ்ந்து
நாம் தவிக்க
......எங்கே போனீர்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

