ஆறுதல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசையா தையல்நாயகி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசையா தையல்நாயகி

வயது 817 மே, 1927 – 6 ஜூன், 2008

பிறந்த இடம்
புங்குடுதீவு 2ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா தையல்நாயகி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

கொள்ளித்தணல் வெந்து தணித்தது உன் உடலை
தசாப்தம் கழித்தும், உன் நினைவை அழிக்க மறந்து விட்டது
இன்னமும் எம் மனம் உணர்கிறது
உன் உயிர் அற்ற மறைவை உணர மறுக்கிறது
இந்த அறிவற்ற இதயம் நீ இல்லை என்பதை
உன்னை நினைக்கையில்
ஒரு கணம் துடிக்க மறுக்கிறது எம் இதயம்

தூண்டிலில் அகப்பட்ட மீனின் வலியை
அக்கணம் துடித்தபடியே உணர்கிறது எம் இதயம்
புகைப்படம் சொல்லும் உன் புறத்தின் அழகை
கலப்படம் இல்லாத புன்னகை சொல்லும்
உன் அகத்தின் அழகை வசப்படும் உன் அன்பு
உன்னோடு ஒரு நிமிடம் பேசினால்
அகப்படும் எம் மனது- உன் மனம் குழையும் பேச்சில்

நீ விதைத்த விதையில் தோன்றினோம் நாங்கள்
எம் தாயை கூட அம்மா என்று
ஒருமுறை தான் அழைத்தோம் - உன்னை தானே
அம்மா அம்மா(அம்மம்மா) என்று அழைத்து
இரு தாயின் அன்பை கண்டோம்
இன்னும் எம்மனம் நினைத்துப்பார்க்கிறது
உன்னோடு வாழ்ந்த அழகிய நாட்களை
உன் மெய்யுள் ஓடிய உதிரம் எம்முள் ஓடும் அந்நாள் வரை,
செய்யுள் போல் இருதயம் சொல்லும் உன் பெயரை...

உன்னை நினைத்த படியே
கடைசி வரிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம்
எம் கண்ணீர் துளிகளால்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.