மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசமாணிக்கம் குகதாஸ்
கணக்காளர்
வயது 5722 அக்டோபர், 1961 – 3 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை சந்தி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட இராசமாணிக்கம் குகதாஸ் அவர்கள் 03-07-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தெய்வேந்திரம், இராஜமாணிக்கம்(சின்னன்ணா) தம்பதிகளின் இரண்டாவது மகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
அர்ஜூன், ஷாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
முருகதாஸ்(இந்தியா), காலஞ்சென்ற மோகனதாஸ்(லண்டன்), இராஜேஸ்வரி(இந்தியா), அருந்தவதாஸ்(நியூசிலாந்து), யோகேஸ்வரி(இலங்கை), பரமேஸ்வரி(கனடா), யோகதாஸ்(நோர்வே), பிரேமவதனா(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லக்ஷ்மி(கொழும்பு), சோதி(கொழும்பு NSR), Dr. குமரன்(கொழும்பு), தேவி மாறன்(கனடா), Dr.கெளரி பெர்னாண்டோ(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,எதற்கும் பயப்படாத மக்களும், கப்பல் கட்டி வானிபம் செய்த இடமும், கடலுணவு, மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த வல்வெட்டித்துறையில்22/OCT/1961 இல் திரு திருமதி தெய்வேந்திரம் இராஜமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகன் திரு.குகதாஸ் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் முருகதாஸ், மோகனதாஸ், இராஜேஸ்வரி, அருந்தவதாஸ், யோகேஸ்வரி, பரமேஸ்வரி மற்றும் யோகதாஸ், பிரேமவதனா போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும். சரஸ்வதி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து அர்ஜுன், ஷாயினி போன்ற அழகிய பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியாக வளர்த்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் கணக்காளராக வேலை பார்த்த இவர் அனைவருடனும் நகைச்சுவையாக பேசுவதுடன் அன்பான அரவணைப்பால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்,இவ்வாறு மனைவி,பிள்ளைகள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 03.07.2019 இல் 57 வயதில் பிரித்தானியாவில் உள்ள LONDON நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
வல்வை மண்ணின் வசந்த
உள்ளமே
எல்லை காத்த எங்கள்
கோமானே
பல்திறன் கொண்ட பாச
உயிரே
அல்லும் பகலும் அன்பாக
பாதுகாத்து
சொல்திறன் மாறாது வாழ்ந்து
சொர்க்கம் சென்றீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

