நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசம்மா இரத்தினம்
வயது 886 ஜனவரி, 1933 – 10 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- மாசார் பளை
- வாழ்ந்த இடம்
- நீராவியடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி பளை மாசாரைப் பிறப்பிடமாகவும், யாழ். நீராவியடி, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய இடங்களைவசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா இரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.
மாசாரில் பிறந்த மகத்தான உறவே வாசம் வீசும் மல்லிகை அழகே
பாசமாய் பேசியவரே ஓசைபடா அழைக்கும் ஒப்பற்ற பிறப்பே.....
எம்மை விட்டு ஏன் பிரிந்து சென்றீர் உங்கள் நினைவால் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
பளை மாசாரில் 06.தை.1933இல் கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியினருக்கு மூன்றாவது மகளாக இராசம்மா அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார் மாணிக்கம், சோமசுந்தரம், சிவக்கொழுந்து ஆகிய சகோதரர்களுடன் குறும்புகள் செய்து இனிமையாக வாழ்ந்து வந்தார் இவர் மெல்ல மெல்ல வாழ்ந்து பெரியவள் ஆனதும் நல்லதம்பி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகன் இரத்தினம் அவர்களை திருமணம் முடித்து யாழ்மண்ணில் சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக ஸ்ரீதரன், ஸ்ரீமோகன், ஜெயறோகினி, ஜெயவதனி, ஸ்ரீகரன் , ஸ்ரீதாசன் ஆகிய பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து கமலா, நிர்மலா, செல்வரட்ணம், வனஜா, கிறிஸ்ரீனா ஆகியோரை திருமணம் முடித்து வைத்து நிதர்சினி, நிரோசன், நிசாந்தன், அபிராமிநிதா, வினுஜா, பிரதீஸ், ஐனகன், பிரவீனா, வரவீனா, சுஸ்நிதா, ஷலோற்த்தா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார் மேலும் சுவையான உணவு செய்வதிலும் பசி என்று வருபவர்களுக்கு நேரம் பாராமல் உணவளித்து மகிழ்வார்
வீட்டுக்கு வருவோர்களை புன்னகையுடன் வரவழைத்து உபசரிப்பார். இவ்வாறு சகோதரர்கள் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்கள் என சந்தோசமாக வாழ்ந்து வந்த நேரத்தில் 10.02.2021இல் 88வயதில் அனைவரையும் தவிக்க விட்டு சென்றுவிட்டார்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

