ஆறுதல்

நன்றி நவிலல்

இராசநாயகம்  ரஞ்சினி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசநாயகம் ரஞ்சினி

வயது 6128 நவம்பர், 1957 – 11 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
கிளிநொச்சி
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அன்னாரின் மறைவுச் செய்திகேட்டு உடன் வந்து, ஆறுதல் கூறிய அனைவருக்கும், வெளிநாடுகளில் இருந்தும் நேரில் வந்தும், தொலைத்தொடர்புச்சாதனங்கள் ஊடாகவும், எமக்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும் கண்ணீர் அஞ்சலி, மலர்வளையங்கள் சமர்ப்பித்தும், மரணச்சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கும் இறுதிக்கிரியையில் சகலவழிகளிலும் உதவியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

இலங்கையில் இறுதியாக உருவான மாவட்டமும்,நெல் மணிகள் காற்றில் அசைந்தாடும் பசுமை நிறைந்த வயல்வெளிகளும், அழகிய நீரோடைகளும், மரக்கறித்தோட்டம், வீட்டுத்தோட்டம் என அழகு நிறைந்த கிளிநொச்சியில் 28/NOV/1957 இல் திரு.திருமதி தம்பையா அருளம்மா தம்பதிகளின் அன்பு கொண்ட மகளாய் ரஞ்சினி அவர்கள் செபஸ்ரியாம்பிள்ளை, தனபாலசிங்கம், சாந்தகுமாரி, ரவிச்சந்திரன், சசீந்திரன் போன்ற உடன்பிறப்புக்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி கிறிஸ்தோப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அறிவு நிறைந்த மகனான இராசநாயகம் எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக மேரிகிளிஜினி, ரஜிதா, மேரிகனிதா, அன்ரன் சோபனன், மசூதனன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து டொனால்ட் இன்பராஜ், சாந்தறொயிஸ், நெந்தில்நாதன் போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து அஸ்விகா, காஷிகா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் வீட்டை அழகாக வைத்திருப்பதில், பூமரங்கள் வளர்பதிலும் அலாதி விருப்பம் கொண்டவராகவும், அனைவருக்கும் உதவி செய்வதிலும், ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 11.09.2019 இல் 61 வயதில் கிளிநொச்சியில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

“கிளிநொச்சி மண்ணின் கிளி ஒன்று
களிப்புற்று வாழ்ந்து கரிசனை காட்டி
விழிகளில் மொழி பேசி - எம்மை
உளி கொண்டு செதுக்கிய சிற்பி
அழிந்ததே அன்புடல் மேனி”

பிற அறிவித்தல்கள்

  1. 12 செப்டம்பர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.