ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசரத்தினம் சாந்தகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசரத்தினம் சாந்தகுமார்

வயது 4720 பிப்ரவரி, 1967 – 22 ஜனவரி, 2015

பிறந்த இடம்
வேலணை பள்ளம்புலம்
வாழ்ந்த இடம்
சுவிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் சாந்தகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்ப ஒளிவிளக்கே!
ஆண்டொன்று ஆனாலும் ஆறவில்லை எம் சோகம்

தாலாட்டிய உன் தாயும் தந்தையும்
உனைத் தேடித் தவிக்கின்றோம்
எங்கு ஓடி ஒழிந்தாய் மகனே
உனது முகம் காண துடிக்கின்றோம் மகனே!

என் அன்பிற்கும் ஆசைக்கும் உரியவரே
இரண்டு முத்துக்களைத் தந்து விட்டு- எங்கு
சென்றீர்கள் எனை விட்டு!
வசந்தம் வாழ்க்கையில் வரும்போது எமையெல்லாம்
கணப்பொழுதில் விட்டுச் சென்றது ஏனோ?

உங்களோடு நாம் வாழ்ந்த காலங்கள் தான் பொற்காலங்கள்
எங்கு பார்த்தாலும் உங்கள் முகம் தான் தெரிகிறது அப்பா!
எங்கள் அன்பு அப்பாவே தினமும் நாம் உங்களைத் தேடுகின்றோம்
எங்களைத் தனியே தவிக்கவிட்டு எங்கு சென்றீர்கள் அப்பா?

தூரத்தில் இருந்தாலும் மனதாலே ஒன்றி வாழ்ந்தோமே சகோதரா!
உன் அன்பான பேச்சிற்கும் சிறு சிரிப்பிற்கும்
ஏங்கி நிற்கின்றோம் சகோதரா!
நித்தம் உனைத்தேடி சித்தம் துடிக்கிறது
திக்கற்று நிற்கின்றோம் திரும்பி வரமாட்டாயா?

பார்ப்பவர் எல்லோரும் கேட்கும் படியாக
மைத்துனர்கள் எம்முடன் ஒற்றுமையாக வாழ்ந்தீரே
எங்களை எல்லாம் விட்டுவிட்டு
எங்கு சென்றீர் மைத்துனரே!

பாசத்திற்கும் பண்பிற்குமுரிய நண்பா
நாம் வாழ்ந்த பொற்காலமும் விருந்தோம்பலும்
எப்போ எம் நண்பா?
உனைத்தேடும் எங்களை தவிக்கவிட்டு
எங்கு சென்றாயடா?

ஆண்டொன்று ஆனாலும் எங்கள் இதயத்துடிப்பில்
அன்பு கொண்ட உன் வதனம் அருகினில் இருப்பது
போல் உணருகின்றோம்
அன்பால் என்றும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு

உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், தாய், தந்தை, சகோதர, சகோதரிகள்,
மைத்துனர், மைத்துனிமார்கள், மருமக்கள், பெறாமக்கள், நண்பர்கள்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 18 ஜனவரி, 20172ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.