மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசதுரை சரஸ்வதி
வயது 852 ஜூலை, 1934 – 4 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை சரஸ்வதி அவர்கள் 04-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
பாலகிருஷ்ணன், தவராசா, சுபத்திரா, காலஞ்சென்ற அருந்ததி, சத்தியசீலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிதம்பரம், அன்னம்மா, இராசையா, பொன்னுத்துரை, இராமலிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வரத்தினம், காலஞ்சென்ற சிற்றம்பலம், சங்கரப்பிள்ளை, தங்கம்மா, இராசமணி, அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்ஷன், நிலானி, நிவேதா, குமரன், பிரணவன், கார்த்தீபன், செந்தூரன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பில் 02/JUL/1934 இல் முருகேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளாக சரஸ்வதி அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார்.
சிதம்பரம், அன்னம்மா, இராசையா, பொன்னுத்துரை, இராமலிங்கம், சுப்பிரமணியம் போன்ற சகோதரங்களுடன் குறும்புகள் செய்து வளர்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனான, இராசதுரை என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக,பாலகிருஷ்ணன், தவராசா, சுபத்திரா, அருந்ததி, சத்தியசீலன் போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து, தர்ஷன், நிலானி, நிவேதா, குமரன், பிரணவன், கார்த்தீபன், செந்தூரன் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவராகவும், சுவையான உணவுகள் செய்வதில் வல்லவராகவும் விளங்கினார். மேலும் அன்பும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 04.09.2019 இல் 85 வயதில் அச்சுவேலியில் மரணம் அடைந்தார்.
”பௌர்ணமி நிலவே
பாச உறவே
வர்ணக் கிளியே
வாழ்வின் ஒளியே
கடவுள் உள்ளமே
கருனை மனமே
என்றும் உங்களின்
நினைவுகளோடு நாங்கள்”
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

