1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசயோகம் பரராஜசிங்கம்
வயது 7531 மே, 1943 – 24 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- வயாவிளான்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், Wuppertal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வயாவிளான் பெரியண்ணன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், ஜேர்மனி Wuppertal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசயோகம் பரராஜசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அம்மா
எங்கள் தெய்வமே
கண்ணின் கருமணியாய் காத்த எம்மை
கண்ணீர் சிந்த விட்டுச் சென்று
ஆண்டு ஒன்று ஆனதோ..?
ஈரைந்து மாதங்கள் எமை
சுமந்து மீட்டெடுத்தாய் பரிவோடு
பாராட்டி சீராட்டி வளர்த்தெடுத்த
எம் தாயே.! உங்களை இனி
எங்கே காண்போம் அம்மா..!
உன் நினைவால் நித்தம் வாடுகின்றோம்.....
சென்ற இடம் கூராயோ
காலத்தின் கோலம்
எங்களிடம் இருந்து பிரிந்து விட்டாலும்
எந்நாளும் எம் மனதில் காவியமாய்
ஆகிவிட்டீர்கள் அம்மா...!
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும் நெல்வயல்களும், மிளகாய்செடிகளும் வெங்காய வயல்களும், மரக்கறித் தோட்டங்களும் பழவகைகள், பயன்தரு மரங்கள் என செழிப்பு மிகு வயாவிளான் பெரியண்ணன் தோட்டத்தில் 31-05-1943 ஆம் ஆண்டில் இராசயோகம் அழகிய குழந்தையாக இவ் ஊரில் அவதரித்தார். அன்பும் பண்பும் நிறைந்த இவர் நடராசா, கனகரட்ணம், ஜெயசிங்கம், மகேஸ்வரராஜா, இராசலட்சுமி, புவனலட்சுமி, விசயலட்சுமி போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் செல்லர் கைராசிப்பிள்ளை தம்பதிகளின் அழகு ஆண் மகனான விமான கட்டுப்பாட்டு அதிகாரியானATC பரராஜசிங்கம் என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து சசிலேகா, சசிதரன், சசிரூபன் எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.
இவர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். ருசியான உணவுகள் செய்வதில் கைப் பக்குவம் நிறைந்தவராகவும், எல்லோரிடமும் பாசம் கொண்டவராக விளங்குவார். இவ்வாறு கணவன் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 24.04.2019 இல் 75 வயதில் ஜேர்மனியில் உள்ள Wuppertal நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
முழுக் கதையையும் வாசிக்க
" அன்பு மலரே
......அன்னை முகமே
அணைத்து மகிழ்ந்த
......ஆசை உயிரே
அன்பு உறவு ஒன்று
....அகிலம் துறந்தது
அன்னை மடியின்
.....ஆயுள் முடிந்தது"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

