ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசேந்திரம் ஜெயராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசேந்திரம் ஜெயராஜா

வயது 7119 மார்ச், 1946 – 13 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
மானிப்பாய், கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சங்குவேலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் மூத்ததம்பி வீதி, கொழும்பு சின்சபா வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரம் ஜெயராஜா அவர்கள் 13-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசேந்திரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அரியரட்ணம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அபிராமி, செந்தூரன், கேசவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற லோகேந்திரராஜா, லோகநாயகி, சிறிராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லோஜினி அவர்களின் அன்பு மாமனாரும்,

அரியேஸ்வரி, அரியதவசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருள்ராஜ், விஜியகலா, சசிகலா, அனந்தபாலன், துளசி, சபேஷன், சரவணன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தினேஸ்குமார், நித்திலா, மிதிலா, வாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2018 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 18-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பொறளை கனத்தை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.