31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா மனோன்மணி
வயது 8618 மார்ச், 1931 – 11 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- தெஹிவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா மனோன்மணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
வெண்பிறை நெற்றியில் விபூதி நீற்றழகும்
அதில் ஒளிரும் சந்தனப் பொட்டழகும்
தினம் துதிக்கும் உருத்திராட்ச மாலையழகும்
தெட்டத் தெளித்த உள்ளத்தழகும்- கள்ளம்
கபடமற்ற குழந்தைப் பேச்சழகும் -இன்னும்
கோடி கோடி உன் நினைவுகளுடன்
இருக்கும் வரை நாம் இருக்க வேண்டும்
எம் தாயே உனை மறக்கும்
நிலை வரின் இறக்க வேண்டும்
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கும்!
குடும்பத்தினர்
எமது அன்னையின் பிரிவுச்செய்தியறிந்து உடன் வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், பலவழிகளில் உதவிகள் புரிந்தோருக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தும், ஆறுதல் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், 13-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்திலும் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து வெள்ளவத்தை தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— சசி இராசையா
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

