ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசையா ரவீந்திரகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசையா ரவீந்திரகுமார்

வயது 5928 நவம்பர், 1959 – 28 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
கொக்குவில்
வாழ்ந்த இடம்
சுவிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Illnau-Effretikon ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா ரவீந்திரகுமார் அவர்கள் 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், மருதலிங்கம், சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காவேரி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிரோஷா, ஹரிகரன் ஆகியோரின் அருமை தந்தையும்,

காலஞ்சென்ற பாலகுமார், இராசகுமாரி(இலங்கை), விஜயகுமார்(ஜேர்மனி), யோககுமார்(சுவிஸ்), செல்வகுமாரி(கனடா), காலஞ்சென்ற உதயகுமாரி, ஜெகதலகுமார்(சுவிஸ்), சாந்தகுமாரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான லதா, மகேந்திரராசா மற்றும் ராணி(ஜேர்மனி), நந்தினி(சுவிஸ்), ரஞ்சிதன்(கனடா), குணம்(சுவிஸ்), நிரஜா(சுவிஸ்), சிறிலகாரன், சித்ராதேவி(இலங்கை), மலர்வண்ணன்(சுவிஸ்), ஜெயராமன்(லண்டன்), கோகிலா(லண்டன்), ஜெகமோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிறீதரன், சாரதா, சூரியபிரபா, செந்தில்குமரன், அஜனிதா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

சாரதா, தாரணி, தீபன், தர்சினி, தர்சிகா, யமுனா, நிரோஷன், மாதுரி ஆகியோரின் பாசமிகு சிறியதந்தையும்,

அபினாஷ், அஜீவி, அபிமான், பிரியந்தன், சங்கீதன், நிஜானா, பிரஜீன், ஜெனின், கீர்த்தனா, கிஷோன், அதர்வா ஆகியோரின் பாசமிகு பெரியதந்தையும்,

பிரகலாதன், கமலதாசன், நிரஞ்சன், ரஜிந்தன், ரஜீவி, ஜெனனன், கௌதமன், திலக், சினோஜன், தினுஸ்கா, அபினா, அபிஷேக், சருன், சஞ்சயன், ஆகாஷ், அபினாஸ், அஷ்வின் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும், நெல்வயல்கள், வாழைத்தோட்டம், புகையிலைத் தோட்டம், வெங்காய வயல்கள், மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த கொக்குவில் 28-11-1959 இல் இராசையா பாக்கியம் தம்பதிகளுக்கு புதல்வனாய் ரவீந்திரகுமார் அவர்கள் பாலகுமார், இராசகுமாரி, விஜயகுமாரி, யோககுமார், செல்வகுமாரி, உதயகுமாரி, ஜெகதலகுமார், சாந்தகுமார் ஆகிய உடன் பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.

இவர் அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் மருதலிங்கம் சாரதாதேவி தம்பதிகளின் அழகுப் பெண்ணான காவேரி அவர்களை திருமணம் முடித்து இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்ததன் பயனாக நிரோஷா, ஹரிகரன் போன்ற அழகுப் பிள்ளைகளைப் பெற்று அன்பாகவும் பண்பாகவும் வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் செல்லபுத்தா என அன்பாக அனைவராலும் அழைக்கப்படும் இவர், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி பிள்ளைகள், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 28.04.2019 இல் 59 வயதில் சுவிஸ்ஸில் உள்ள Illnau-Effretikon நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

கொக்குவில் தந்த
..........குல விளக்கே
அன்பு உள்ளமே
......அழகிய வதனமே
கரு விழியே
.....காந்தப் பார்வையே
காலன் உம்மைப் பறித்து
.....கவலையில் வாட வைத்தான்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.