ஆறுதல்

நினைவஞ்சலி

இராசையா சரஸ்வதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசையா சரஸ்வதி

வயது 7321 ஆகஸ்ட், 1946 – 23 ஜூலை, 2020

பிறந்த இடம்
புத்தூர்
வாழ்ந்த இடம்
உருத்திரபுரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா சரஸ்வதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லப்பா இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராசமணி, சின்னத்துரை, மாணிக்கம், காலஞ்சென்ற சந்திராவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரவிச்சந்திரன், சியாமளா, மஞ்சுளா, பரிமளா, ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மாலினி, விவேகானந்தன், பாலகுமாரன், கஜபதிபாலன், லாவண்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருஷாந்தி, சஞ்சயன், எழில்வதனன், அர்ச்சனா, அருவிகா, அருவின், அஷ்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2020 வெள்ளிக்கிழமை அன்று கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் 20-08-2020 வியாழக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெற்று பின்னர் 22-08-2020 சனிக்கிழமை அன்று வீட்டுக் கிருத்திய கிரியைகளும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.