ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசையா சின்னையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசையா சின்னையா

வயது 977 டிசம்பர், 1921 – 16 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
ஏழாலை மேற்கு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசையா சின்னையா அவர்கள் 16-09-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, நாகமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை, ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி(Nona) அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீகாந்தா(கனடா), சந்திரகாந்தி(இலங்கை), செந்திவேல்(கனடா), உமாகாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தங்கம்மா, ஞானம்மா, பாக்கியம், கனகசபை, சின்னதுரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நீருபா, கணேசபிள்ளை(இலங்கை), கல்யாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மயில்வாகனம், சிவஞானசுந்தரம், முத்துராசா, இராசமலர்(கனடா), கமலாசனி, சிவப்பிரகாசம், கனகம்மா, இராமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கார்த்தீபன்(ஐக்கிய அமெரிக்கா), நிருத்திகன், ரிசிகன், பிரியங்கா, மதுரிகா, விசாகன், வினோரா, யதுர்சன், சாயிரா, தாணிகா, லக்சினி, டேவிட் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அரன், சிரேயா, ஜசியா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் ஏழாலை மேற்கில் புகழ் பூத்த சீமான் திரு.சின்னையா அவர்தம் பாரியார் நாகமுத்து அவர்களின் அன்பு மகனாக 07/DEC/1921 ஆம் ஆண்டில் திரு.இராசையா அவர்கள் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தந்தையுடனும் தங்கம்மா, ஞானம்மா, பாக்கியம், கனகசபை, சின்னத்துரை போன்ற உடன்பிறப்புகளுடன் சேர்ந்து சொந்தத் தொழில் செய்து உயர்நிலை அடைந்த இவர் திரு.திருமதி அப்பாப்பிள்ளை ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளான மனோன்மணி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக ஸ்ரீகாந்தா, சந்திரகாந்தி, செந்திவேல், உமாகாந்தி எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று அன்பாக வளர்த்து நிருபா, கணேசபிள்ளை, கல்யாணி போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து கார்த்தீபன், நிருத்திகன், ரிசிகன், பிரியங்கா, மதுரிகா, விசாகன், வினோரா, யதுர்சன், சாயிரா, தாணிகா, லக்சினி, டேவிட் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், அரன், சிரேயா, ஜசியா எனும் பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர் நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 16.09.2019 இல் 97 வயதில் கனடாவில் உள்ள Markham நகரத்தில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.