ஆறுதல்

மரண அறிவித்தல்

இரத்தினம் சிவஞானசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இரத்தினம் சிவஞானசுந்தரம்

வயது 5529 டிசம்பர், 1963 – 3 அக்டோபர், 2019

பிறந்த இடம்
சாவகச்சேரி வடக்கு
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சிவஞானசுந்தரம் அவர்கள் 03-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராமலிங்கம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வடிவாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசா, அனோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிசாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சாச்சிகா அவர்களின் அன்பு அம்மப்பாவும்,

காலஞ்சென்றவர்களான சிவகுமார், சிவபாலன், மற்றும் சிவரஞ்சனி, சிவநேசன், சிவராணி, சிவாறயனி, சிவறூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரி, சரோஜினிதேவி, இந்திராணி, மகேஸ்வரி, சிவசுந்தரலிங்கம், கணேசலிங்கம், றஞ்சிதாதேவி, சற்குணாதேவி, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய தென்மராட்சியில் சகல வளங்களைக் கொண்ட சாவகச்சேரி வடக்கு மீசாலையில் 29/DEC/1963 ஆம் ஆண்டில் திரு.திருமதி இரத்தினம் தெய்வானை தம்பதிகளுக்கு அருமை மகனாக திரு. சிவஞானசுந்தரம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் சிவகுமார், சிவபாலன், சிவரஞ்சனி, சிவநேசன், சிவராணி, சிவாறயனி, சிவறூபன் எனும் உடன்பிறப்புகளுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி இராமலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளான வடிவாம்பிகை என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து வந்தனர்.

முழுக் கதையையும் வாசிக்க

இருவரின் சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக தனுசா, அனோஜன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து நிசாந்தன் என்பவருக்கு திருமணம் முடித்து சாச்சிகா எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் சந்திரன் என அனைவராலும் அழைக்கப்படும் இவர் புத்தகங்கள் வாசிப்பதையும், தினசரி நாளிதழ்களை படிப்பதையும் தனது அன்றாட பொழுதுபோக்காக கொண்டிருந்த இவர், அதிக பக்தி கொண்டவரும் மேலும் உறவுகளிடம் பாசத்தை பொழிந்து, வாழ்வில் நேர்மையை கடைபிடித்த இவர் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணமும் கொண்டு விளங்கினார்.

இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளை, உற்றார், உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 03.10.2019 இல் 55 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

பிற அறிவித்தல்கள்

  1. 5 நவம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.