ஆறுதல்

மரண அறிவித்தல்

இரத்தினம் சோமேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இரத்தினம் சோமேஸ்வரி

வயது 7510 அக்டோபர், 1943 – 13 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் முத்துஐயன்கட்டை வசிப்பிடமாகவும், கிளிநொச்சியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சோமேஸ்வரி அவர்கள் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

நளாயினி, நந்தினி, யசோதினி, தயாபரன், தனபாலன், சறோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வரத்தினம், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறிக்குமார், தேவாகரன், சுதாஸ்கரன், சந்தியவாணி ஆகியோரின் அன்பு மாமியும்,

நமிர்தன், கிசானி, சயாழினி, மோகிதன், ரிசானி, கவின், வருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2019 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல. 81, அண்ணா வீதி, ஆனந்தபுரம் மேற்கு கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், தீவுக் கூட்டங்களில் பெரியதும், கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த நெடுந்தீவில் 10/OCT/1943 இல் திரு.திருமதி வீரசிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளாய் சோமேஸ்வரி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் செல்வரத்தினம், கனகரத்தினம், பாலசிங்கம் போன்ற சகோதரங்களுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி சோமசுந்தரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகன் திரு. இரத்தினம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக நளாயினி, நந்தினி, யசோதினி, தயாபரன், தனபாலன், சறோஜினி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து சிறிக்குமார், தேவாகரன், சுதாஸ்கரன், சந்தியவாணி போன்றவர்களைத் திருமணம் முடித்து நமிர்தன், கிசானி, சயாழினி, மோகிதன், ரிசானி, கவின், வருண் போன்ற பேரப்பிள்ளைகளுடம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 13.08.2019 இல் 75 வயதில் கிளிநொச்சியில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

எங்கள் தாயே இன்பத் தாயே
திங்கள் போன்று ஒளிரும் தாயே
எங்கும் நன்மை பரப்பிய தாயே
உங்கள் வாழ்வு கடின வாழ்வே
எங்கள் மீது பாசம் பொழிந்து
எங்கே போனீர் தங்கத் தாயே

பிற அறிவித்தல்கள்

  1. 12 செப்டம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.