மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம்மா நடராஜலிங்கம்
வயது 875 பிப்ரவரி, 1932 – 26 மே, 2019
- பிறந்த இடம்
- மடத்தடி
- வாழ்ந்த இடம்
- மீசாலை மேற்கு, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தென்மராட்சி சாவகச்சேரி வடக்கு மடத்தடியைப் பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கை வாழ்விடமாகவும், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம்மா நடராஜலிங்கம் அவர்கள் 26-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் வாழ்விடத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, அன்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், கார்த்திகேசு நாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜலிங்கம்(ஓய்வுநிலை நெசவு ஆசிரியர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஜெகதீசன்(பிரான்ஸ்), ரோகிணி(ஆசிரியர்- கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி), ஜெயக்குமார்(அமெரிக்கா, கனடா), ஜெயபாலன்(மொன்றியல்- கனடா), ஜெயபரன்(கனடா), சித்திரா(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரவேலு(ஓய்வுநிலை அதிபர்), முத்தையா(மார்க்கண்டு– ஓய்வுநிலை தபால் உத்தியோகத்தர்), ஞானாம்பிகை(ஓய்வுநிலை ஆசிரியர்), Dr.சிவகுரு, கனகலிங்கம்(ஓய்வுநிலை ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினபூபதி, தில்லைநடேசன் மற்றும் கமலாவதி(கனடா), இராஜேஸ்வரி(கனடா), விக்னேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற நேசமலர் ஆகியோரின் நேசத்துக்குரிய மைத்துனியும்,
சரோஜினிதேவி(பிரான்ஸ்), பரஞ்சோதி(இலங்கை), துஷ்யந்தி(கனடா), புனிதமலர்(மொன்றியல்- கனடா), அன்பரசி(கனடா), முருகதாசன்(கனடா), காலஞ்சென்ற குகநேசன், கணேசன்(அவுஸ்திரேலியா), சிவநேசன்(கனடா), பவானி(கனடா), ஜெயந்தி(கனடா), வல்லபை(இலங்கை), கஜேந்திரா(அவுஸ்திரேலியா), சரத்சந்திரா(இலங்கை), உத்தரை(பிரித்தானியா), காலஞ்சென்ற நமசிவாயசேயோன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
முருகதாஸ்(இலங்கை) அவர்களின் பெரியதாயாரும்,
பிரசாந்தி, கஜேந்திரன், பிரிந்தன், நிரோசன், தர்சிகா, நிராஜ், யதுசன், விதுசன், கார்த்திகன், மதுரிகன், தீபிகா, ஜெயனி, ஜெயசன், ஜெயராம், மிதுரன், மிதுரா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2019 புதன்கிழமை அன்று நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த தென்மராட்சியில் நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,நெல்வயல்கள், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் சரவணமுத்து அன்னப்பிள்ளை தம்பதிகளுக்கு சிரேஷ்ட மகளாக இரத்தினம்மா அவர்கள் 05/FEB/1932 ஆம் ஆண்டில் இவ் அவனியில் குமாரவேலு, முத்தையா, ஞானாம்பிகை, Dr சிவகுரு, கனகலிங்கம் எனும் உடன் பிறப்புகளுடன் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் கார்த்திகேசு நாயகம் தம்பதிகளின் அழகு நிறைந்த ஆண் மகனான நெசவு ஆசிரியர் நடராஜலிங்கம் என்பவரைத் திருமணம் முடித்து ஆருயிர் மனைவியாக மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து ஜெகதீசன், ரோகிணி, ஜெயக்குமார், ஜெயபாலன், ஜெயபரன், சித்திரா போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் அமெரிக்கா,கனடா,பிரான்ஸ் போன்ற நாடுகளில் வாழ்ந்ததுடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,அமைதியும் சாந்தமும் பொறுமையும் குறையாக் கருணையும் மன்னிப்பும் கொண்டு விளங்கினார். சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 26.05.2019 இல் 87 வயதில் மீசாலை மேற்கில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"மடத்தடி மண்ணின்
......மங்காத அழகே
மாணிக்க ஒளியே
.......மல்கோவாக் கிளியே
அன்பாகப் பேசும்
.....அன்னை உள்ளமே
அழிந்தது உடல் மனதில்
......நிலைத்தது உருவாய்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

