மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினபூமணி சோமசுந்தரம்
வயது 8327 மார்ச், 1936 – 4 ஜூன், 2019
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- காரைநகர் களபூமி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் களபூமியை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினபூமணி சோமசுந்தரம் அவர்கள் 04-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(Lawyer Clerk- மலேசியா) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு கனகசபை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr.சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
தருமரத்தினம்(அவுஸ்திரேலியா), சரோஜினிதேவி(கனடா) , துரைரத்தினம்(கனடா), கிருஷ்ணரத்தினம்(கனடா) , மாலினிதேவி(கனடா), குணரத்தினம்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மீரா, ராஜினி, யோகேஸ்வரி, ஞானாம்பிகை ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நேசமணி(குஞ்சு), காலஞ்சென்ற தருமநாயகம்(ராசன்) மற்றும் ஒப்பிலாமணி, காலஞ்சென்றவர்களான தவமணி, பேரின்பநாயகம்(அப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திவ்யா, கரிஷ், அம்பிகை, அபிராமி, அநந்தன், கஸ்தூரி, காயத்திரி, சகானா, சாயினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில் சிறப்பும் சகல வளங்களைக் கொண்டதுமான மலேசியாவில் 27/MAR/1936 இல் திரு திருமதி. பொன்னம்பலம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளாக இரத்தினபூமணி அவர்கள் நேசமணி, தருமநாயகம், ஒப்பிலாமணி, தவமணி, பேரின்பநாயகம் எனும் சகோதரருடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் அறிவும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் திரு. திருமதி கதிரவேலு கனகசபை தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான Dr.சோமசுந்தரம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக காரைநகர் களபூமியில் வாழ்ந்ததன் பயனாக தருமரத்தினம், சரோஜினிதேவி, துரைரத்தினம், கிருஷ்ணரத்தினம், மாலினிதேவி, குணரத்தினம் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்ததுடன், மீரா, ராஜினி, யோகேஸ்வரி, ஞானாம்பிகை போன்றவர்களை திருமணம் முடித்து திவ்யா, கரிஷ், அம்பிகை, அபிராமி, அநந்தன், கஸ்தூரி, காயத்திரி, சகானா, சாயினி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 04.06.2019 இல் 83 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"மலேசிய மண்ணின்
.......மாந்தர் குலமே
களபூமி தனில்
.......புகுந்த உறவே
பழம் போல்
....... இனித்த உயிரே
நிலம் போல்
.........நிலைத்தீர் மனதில் "
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

