மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினசாமி மங்கையர்க்கரசி
வயது 7526 பிப்ரவரி, 1942 – 6 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- மாத்தளை
- வாழ்ந்த இடம்
- பொல்காவெல, கிளிநொச்சி, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமாத்தளையைப் பிறப்பிடமாகவும், குருநாகல் பொல்காவலை, கிளிநொச்சி, கொழும்பு வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசாமி மங்கையர்க்கரசி அவர்கள் 06-01-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரவேற்பிள்ளை, கண்ணம்மாள் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லையாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
செந்தமிழ்ச்செல்வர்(JP), இரமணீஸ்வரன், இரமேஸ்வரன்(Frankfurt), தியாகேஸ்வரி, இரட்ணேஸ்வரி, காலஞ்சென்ற ரஞ்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற குமாரவேல் கெங்காதரன் மற்றும் யோகநாதன் ஆகியோரின் அன்பு மூத்த சகோதரியும்,
இரங்கநாயகி, வளர்மதி, கீதா, சிறினிவாசன், அகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனஞ்சயன், அருந்ததி, அருண்பிரசாத், பிரவீன்குமார், துஸ்யந்தினி, தனுஷாந்தினி, தர்ஷாந்தன், அகலியா, சரணியா, றிதன், சயங்கா, சரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஷஸ்மிதா, பிரவேஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-01-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 03:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 05:00 மணியளவில் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.64,
மாட்டா கொட வீதி,
வத்தளை,
கொழும்பு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

