மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் தனசிங்கம்
வயது 6419 ஏப்ரல், 1955 – 19 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- Roissy-En-Brie
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறை தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Roissy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் தனசிங்கம் அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், அருளம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற செல்வரத்தினம், இராசம்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேக்கா, கஸ்தூரி, பிரவீன்ந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, வடிவேலு(தம்பு), சற்குணவதி(சற்குணம்) மற்றும் மாதங்கி(வசந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுஜீவன், நீலசயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்வின் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த ஊர்காவற்துறை தம்பட்டியில் 19/APR/1955 இல் திரு.திருமதி இரத்தினம் அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு.தனசிங்கம் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் கதிரவேலு, வடிவேலு, சற்குணவதி, மாதங்கி போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி செல்வரத்தினம் இராசம்பு தம்பதிகளின் அன்பு மகளான ஈஸ்வரி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சுரேக்கா,கஸ்தூரி,பிரவீன்ந் எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சுஜீவன், நீலசயன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து அஸ்வின் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கிய இவர் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளை, சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 19.08.2019 இல் 64 வயதில் பிரான்ஸில் உள்ள Roissy En Brie நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
உழைப்பின் சிகரமே உதவிடும் மனமே
அழைக்கும் போது அன்பு பொழியும்
களைப்பை மறந்த கருணை உறவே
பிழைப்பைத் தேடி பிரான்ஸ் சென்று
உழைத்து வளர்ந்த உன்னத உறவே
நிலைந்து வாழ்ந்து நிம்மதி பெற்று
களைத்து வீழ்ந்தீரே கலங்கி அழுகிறோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

