ஆறுதல்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இரத்தினம் மகேஸ்வரன்

Retired Engineer Senior Civil Servant Employment Tribunal Judge

வயது 6115 மார்ச், 1958 – 4 மே, 2019

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
தெஹிவளை, Stanmore

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நெல்வயல்கள்,வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்.உரும்பிராயில் 15/MAR/1958 இல் இளைப்பாறிய சுங்க இலாகா அதிகாரியான வேலுப்பிள்ளை இரத்தினம் யோகவதி இரத்தினம் தம்பதிகளுக்கு சிரேஷ்ட புதல்வனாக மகேஸ்வரன் அவர்கள் பவானி, சாந்தி, நடேஸ்வரன், இராஜ்குமார் ஆகிய உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன்,முன்னாள் நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் சின்னையா அருளம்பலம் பரமேஸ்வரி அருளம்பலம் தம்பதிகளின் அன்பு மகள் மேனகா அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து அருண், தீபா ஆகிய பிள்ளைகளை பெற்று வளர்த்து மகிழ்ந்து வாழ்ந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் படித்து உயர்நிலை அடைந்ததுடன் Retired Engineer Senior Civil Servant Employment Tribunal judge ஆக சேவை செய்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 04.05.2019 இல் 61 வயதில் பிரித்தானியா லண்டனில் உள்ள Stanmore நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"அன்பில் சிறந்த
.......அழகு மலரே
அனைத்தையும் மறந்து
.......பண்பு காட்டி
பக்குவமாய் வளர்த்த
.....பாச உறவே
காலம் உள்ளவரை
....... மறக்காத உருவே"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.