1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் இராதாகிருஷ்ணன்
வயது 7212 டிசம்பர், 1946 – 18 ஜனவரி, 2019
- பிறந்த இடம்
- வடலியடைப்பு
- வாழ்ந்த இடம்
- சண்டிலிப்பாய், ஜேர்மனி, ஓமான், பிரித்தானியா, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, சண்டிலிப்பாய், ஜேர்மனி, ஓமான், லண்டன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் இராதாகிருஷ்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவாய் அகத்தின் ஒளிவிளக்கே -அப்பா!
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ! அப்பா
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை நம் வாழ்வில்
என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அப்பா!!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உங்கள் நினைவுடன் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், சகோதர, சகோதரிகள்....
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

