ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

இரட்ணமாலா பவளகாந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இரட்ணமாலா பவளகாந்தன்

வயது 483 பிப்ரவரி, 1971 – 4 ஜூன், 2019

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை ஊரிக்காடு
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரட்ணமாலா பவளகாந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உயிர் சுமந்த தாயே!
எம் வாழ்வின் வலி சுமந்த நீ
ஒரு வருடமாக எம்முடன் இல்லை
ஆனாலும்
எம் வாழ்வின் வசந்தங்களிலெல்லாம்
வாழ்கிறாய்....

கடலில் தோன்றும் அலைகள் யாவும்
கரையைச் சேர்வதைப்போல
உங்கள் எண்ண அலைகள் யாவும்
எங்களுடனேயே வாழ்கின்றன...

வாழ்ந்த வாழ்க்கையில்
உயிரோடு ஒட்டிய உறவே
தஞ்சை கோயில் உள்ளவரை
சோழனுக்கு மரணமில்லை...
ஈழம் என்ற சொல்லிருக்கும்வரை
தலைவனுக்கும் மரணமில்லை
உங்களால் கட்டமைக்கப்பட்ட
எங்கள் வரலாறு இருக்கும் வரை
உங்களுக்கும் மரணமில்லை...

மரணத்தைவிட தொன்மையான
கண்ணீரால் அஞ்சலிக்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,இந்தியாவிற்கு கப்பல் வானிபம் செய்த இடமும், கடலுணவு, புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் கதிர்காமநாதன் இரட்ணேஸ்வரி தம்பதிகளுக்கு அன்புப் புத்திரியாக இரட்ணமாலா அவர்கள் 03/FEB/1971 ஆம் ஆண்டில் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் இரட்ணகலா, இரட்ணரூபி, இரட்ணஜெயந்தி, இரட்ணஜோதி போன்ற அன்புச் சகோதரங்களுடன் குறும்புகள் செய்து வளர்ந்து நன்கு படித்து உயர்நிலை அடைந்ததுடன் முருகுப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அறிவு மகனான பவளகாந்தன் அவர்களைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து கரிஸ், கம்ஷா, கபினாஸ் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,அமைதியும் சாந்தமும் பொறுமையும் குறையாக் கருணையும் மன்னிப்பும் கொண்டு விளங்கினார். சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன்,பிள்ளைகள், உற்றார்,உறவினர் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 04.06.2019 இல் 48 வயதில் கனடாவில் உள்ள Scarborough நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"வல்வை மகளே
......வள்ளல் குணமே
வெள்ளை மனமே
....... வேங்குழல் இசையே
கள்ளம் கபடமற்ற
......கனிவுப் பேச்சே
அள்ளி எடுத்தான்
......ஆண்டவன் தன்னுடன்"

பிற அறிவித்தல்கள்

  1. 4 ஜூன், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.