மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினசாமி பரமேஸ்வரி
வயது 8525 மே, 1932 – 20 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி, Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணை சிவலிங்கப் புளியடியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் தெற்கு சித்தம்பாதி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசாமி பரமேஸ்வரி அவர்கள் 20-11-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுந்தரம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தப்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசாமி(D.O.A.S- யாழ். கச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,
மாலினி, இராஜேந்திரா, விஜேந்திரா, யோகேந்திரா, சாந்தினி, பத்மினி மற்றும் காலஞ்சென்ற ராகினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம், கனகராஜா, இராஜலக்சுமி, வீரசிங்கம் மற்றும் செல்வராணி, இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவசுப்பிரமணியம், குணேஸ்வரி, ஆனந்தராணி, ஜெயரட்னம், நந்தகோபால், காலஞ்சென்ற மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷ்யந்தன், பபிதா, ரவிசங்கர், ஜெனனி, ஜெனன், நிஷாந்திக்கா, சேரன், சிந்துஜா, அனுஷாந்த், ஜெய்ஷாந்த், அருண், ஆரன், அர்ஜுன், அருந்தா, அரவின், காலஞ்சென்ற வாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஷிவாணி, துஷாணி, ரிஷி, தியானா, கிரீனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

