நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரவி கந்தையா
வயது 5322 டிசம்பர், 1965 – 16 ஜூன், 2019
- பிறந்த இடம்
- இலங்கை
- வாழ்ந்த இடம்
- அமெரிக்கா, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇலங்கையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரவி கந்தையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மாதமொன்று ஆனதையா மறைந்து
மனதில் உன் நினைவுகள் தானையா நிறைந்து
மரணமேன் உனைத் தொட்டதையா விரைந்து
மார்பிலுள்ள வேதனைத்தீ என்றுதான் மாறுமையா
காதோரம் ஒலித்த உன் குரல்கள்
கேட்கத் துடிக்கும் எம் செவிகள்
காணாதா என இன்றும் ஏங்கும் விழிகள்
காலனிட்டதோ எமக்கு
உனை நித்திய தூக்கத்தில் பார்த்த வலிகள்
மாதமொன்று சென்றாலும் மாறவில்லை
உனைப் பிரிந்த துயரிலிருந்து நாம் மீளவில்லை
அந்தியொட்டி நாளில் உம்
ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்திக்கின்றோம்
அன்னாரின் துயரச் செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசி மூலமும் அனுதாபச் செய்தி கூறியவர்களுக்கும், எமது குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருந்து உதவிய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
உலகில் அழகிய நாடும் தென் ஆசியாவில் நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய தீவும் சகல வளங்களையும் தன்னகத்தே கொண்ட இலங்கையில் 22/DEC/1965 ஆம் ஆண்டில் திரு.திருமதி சிவப்பி கந்தையாதம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.ரவி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அழகு நிறைந்த இவர் பாக்கியம், புஷ்பராணி, புஸ்பராஜா, பிரேமசந்திரன், பிரேமதாஸ் போன்ற சகோதரங்களுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன் திரு.திருமதி ஷீலா சீவரட்ணம் அன்தனி சீவரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளான ஹனா ரஜிதா என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து ஜொஷிவா எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் சிறந்த அறிவாளியும் அன்புள்ளம் கொண்டவருமான இவர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன்,பொது உதவிகள் புரிவதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளை, நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 16.06.2019 இல் 53 வயதில் அமெரிக்காவில் உள்ள Ohio மாநிலத்தில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
புன்னகை முகம் ஒன்று
........பூப்போல் உதிர்ந்தது
வண்ண மயில் ஒன்று
........சிறகொடிந்து வீழ்ந்தது
வாசலிலே காத்திருந்தோம்
........வாடிய வதனமுடன்
நீங்கள் மட்டும் வரவில்லை
........நிம்மதியும் கிடைக்கவில்லை
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

