5ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரவிச்சந்திரன் சித்திராதேவி
வயது 532 ஏப்ரல், 1962 – 2 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய், கொழும்பு, ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் ஈழத்து சிதம்பரத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும், கொழும்பு, கனோவர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.திருமதி பொன்னையா அவர்களின் அன்பு மகளான ரவிச்சந்திரன் சித்திராதேவி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும் விட்டு பிரிந்தது ஏனோ?
துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய் - அம்மா
எம்மை எல்லாம் ஆழாத்துயரில்
ஆழ்த்தி விட்டு சென்றது ஏனோ?
ஆண்டுகள் ஐந்து ஆனதம்மா
உங்கள் நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு எம்மை
வந்து துடிதுடிக்க வைக்குதம்மா!
ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும்
அன்னையே உன்னைப்போல் அன்பு கொள்ள யாருமில்லை!
நம் உள்ளத்தின் உள்ளே வளரும்
ஒரு உன்னதமான தெய்வம் நீ அம்மா
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் உங்களின்
பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
ஆனால் முழு நினைவாக
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ். காரைநகர் ஈழத்து சிதம்பரத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சித்திராதேவி அவர்கள் பொன்னையா ராஜலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளாக 2 ஏப்ரல் 1962 அன்று இவ் அவனியில் அவதரித்தார்.
இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் தில்லையம்பலம் செல்வமணி தம்பதிகளின் அன்பு மகனான ரவிசந்திரன் அவர்களைத் திருமணம் முடித்து சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக, ஜனார்த்தனன், திவாகரன் ஆகிய பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
சோமேஸ்வரன் ஜெயவிக்கிரமராஜா மந்திரீயில் 11 வருடங்களாக பட்டய கணக்காளராக பணிபுரந்த இவர், அங்கு தங்க மெடல் போன்ற விருதுகளை பெற்றவர்.
மேலும் இவர் இலங்கை ஒளிபரப்பு கூட்டுதாபணத்தில் பெண்களின் பங்களிப்பு தொடர்பான விடயத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக கடமை புரிந்தார்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

