1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரவிக்குமார் வளர்மதி
வயது 4110 டிசம்பர், 1967 – 29 ஜூன், 2009
- பிறந்த இடம்
- புலோலி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுலோலியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ரவிக்குமார் வளர்மதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமான எங்கள் அம்மாவே!
ஆண்டொன்று ஓடி மறைந்ததுவோ நீங்கள் எம்மைப் பிரிந்து?
தாயாகி வந்த எம் தவமே வலிக்கிறது எம் நெஞ்சம்!
எவ்விடர் வரினும் சாயாத கோபுரமே!
இதய நோயினால் தாக்குண்டு வீழ்ந்துவிட்டீர்களே?
விதி செய்த சதியால் நாம் கதியற்று நிற்கின்றோம்.
இன்னல்கள் ஏதும் எமை அணுகாது காத்த அன்னையே!
மொட்டுக்கள் பூத்துக் குலுங்கும் வேளை தனிலே, ஏன்
பாதி வழியில் காலனவன் உம் வாழ்வை முடித்தான்?
உறவுகளை அன்புடன் அரவணைத்து உபசரித்தீர்,
அயலவர்களுக்கு ஆலமரமாய் நிழலளித்த உத்தமியே!
வெந்தணலில் வேகியதோ உங்கள் உடல்?
ஒப்புவமை இல்லாத எம் அம்மாவே உந்தன்,
புன்முறுவலுறும் இன்முகம் காண எம் மனம் துடிக்கிறது!
தினம் தினம் இரத்த கண்ணீர் வடிக்கின்றோம்,
சொப்பனத்தில் வந்தேனும் ஒரு செய்தி சொல்லுங்களேன்!
மறு ஜென்மம் உண்டென்றால் மறுபடியும் வரவேண்டும்,
எமக்கு அன்னையாய், அது வரையில் நீங்கள் வரைந்த
பாதையில் தொடருகிறோம் எங்கள் பயணத்தை......
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
காலமெல்லாம் உங்கள் பிரிவால் துயருறும் கணவர், மகன், மகள், தாய், சகோதரர்கள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

