மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
றேமண்ட் பாலரட்ணம்
வயது 6114 ஆகஸ்ட், 1958 – 31 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட றேமண்ட் பாலரட்ணம் அவர்கள் 31-08-2019 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான T. F. W. பாலரட்ணம் மே பெயற்றிஸ்(ஜோதி ரீச்சர்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேதநாயகம், மேரிஜோசவின்(பவளம் ரீச்சர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜனனி(Nilani) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜோதினி, றோஷினி, கிறிஷ்னி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெகராஜ், வசந்தினி, வினோதராஜ், அமல்ராஜ், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாணத்தில் 14/AUG/1958 இல் திரு.திருமதி T.F.W பாலரட்ணம் மேபெயற்றிஸ்(ஜோதி ரீச்சர்) தம்பதிகளின் அன்பு மகனாக திரு.றேமண்ட் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் ஜெகராஜ், வசந்தினி, வினோதராஜ், அமல்ராஜ், தர்ஷினி போன்ற சகோதரங்களுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி வேதநாயகம் மேரிஜோசவின்(பவளம் ரீச்சர்) தம்பதிகளின் அன்பு மகளான ஜனனி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ஜோதினி, றோஷினி, கிறிஷ்னி எனும் அழகிய பிள்ளைகளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் புனிதராஜ் எனவும் நாமம் கொண்ட இவர் ஜேர்மனியில் சில காலம் வாழ்ந்ததுடன் எப்போதும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார், உடன்பிறப்புகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 31.08.2019 இல் 61 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
சிரிக்கும் நிலவே சிறந்த மனதே
எரிக்கும் கணலே எளிமை உறவே
விரித்தாய் எண்ணச் சிறகை வென்றாய்
மரித்தாய் மனங்களில் நிலைத்தாய் இறையாய்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

