மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
றூபி மாக்கிறேட் அல்விறட்
கொழும்பு பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியர்மடம் ஆசிரியை, ஆயுள்வேத ஹோமியோபதி மருத்துவர்
வயது 9219 ஜூன், 1926 – 15 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, ஜேர்மனி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட றூபி மாக்கிறேட் அல்விறட் அவர்கள் 15-04-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை(ஆசிரியர்- ஆயுள்வேத வைத்தியர்), மேரி திரேஸ் அமிர்தம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அல்விறட் அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தி அவர்களின் அன்புத் தாயாரும்,
குகன் அவர்களின் அன்பு மாமியாரும்,
ஜெயமணி, ராஜசூரியர், காலஞ்சென்றவர்களான ஜெயராசா, அருட்சகோதரி ஒலிவியா மற்றும் ஜெயரட்டினம், ஜெயபாக்கியம், காலஞ்சென்ற ஜெயசீலன் மற்றும் ஜெயமலர், காலஞ்சென்ற ஜெயந்திரா மற்றும் ஜெனிற்றா, சபின்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அலோயிஸ்-எல்சா, மைக்கல் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், தீவுக்கூட்டங்களில் பெரிய தீவும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு, பயன்தரும் மரங்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த நெடுந்தீவு கிழக்கில் 19-01-1926 இல் ஆயுர்வேத மருத்துவரும் ஆசிரியருமான சின்னத்துரை, மேரிதிரேஸ் அமிர்தம் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வியாக றூபி மாக்கிறேட் அழகிய குழந்தையாக அவதரித்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் ஜெயமணி, ராஜசூரியர், ஜெயராசா, ஒலிவியா, ஜெயரட்டினம், ஜெயபாக்கியம், ஜெயசீலன், ஜெயமலர், ஜெயந்திரா, ஜெனிற்றா, சபின்ஸ் போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் சந்தியாப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அழகு மகனான அல்விறட் என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வசந்தி எனும் அன்பு நிறைந்த பெண் பிள்ளையை பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், கொழும்பு பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியர்மட ஆசிரியையாக கடமை ஆற்றியதுடன். ஆயுர்வேத ஹோமியோபதி மருத்துவராகவும் நிறைந்த கடமை ஆற்றினார். குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவர் மகளின் மீது உயிரே வைத்திருந்ததுடன், கடைசி காலங்களில் டிவியில் படங்கள், பாடல்கள் விரும்பி பார்த்து மகிழ்ந்தார்.
இவ்வாறு பிள்ளை, பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 15-04-2019 இல் 92 வயதில் லண்டனில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அன்புக் கடலே
அன்னை உருவே
அழகிய வதனம்
அழியா உருவம்
சிரித்துப் பேசிய
மகிழ்ந்த உறவே
சரித்திர மலையே
சிரத்தில் உறைந்தீர்"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

