1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாநாதன் தவசீலன்
வயது 505 ஜனவரி, 1969 – 16 ஜூன், 2019
- பிறந்த இடம்
- கிளிநொச்சி
- வாழ்ந்த இடம்
- ஊர்காவற்துறை, நீர்கொழும்பு, Malters
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். ஊர்காவற்துறை, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸ் Malters ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சபாநாதன் தவசீலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நண்பர்களின் சமர்ப்பணம்
அன்பான நண்பன் தவசீலன்- எம்
மனங்களை ரணமாக்கி விட்டு
ஓடி மறைந்து ஓராண்டு ஆனதுவோ!
நாடி வந்தோர் நல்ல தேவை உணர்ந்து
நாளும் உதவிய நல்ல மனிதன்
எல்லோருடனும் இன்முகத்துடன் பழகும் பாங்கு
கல்லையும் கசிய வைக்கும் கனிவான பேச்சு
கரும்பான எங்களின் நட்பு நித்தமும்
மலர்ந்த முகத்துடன் மகிழ்ந்த காலம்
நட்பு என்ற வார்த்தைக்கு
இலக்கணமாக வாழ்ந்து காட்டியவன் நீ தவசீலன்
எங்களுக்கு நீ நண்பனாக மாத்திரமன்றி
ஆசானாக, வழிகாட்டியாக எங்கள்
குடும்பத்தில் ஒருவனாக இருந்தவன் நீ
பிரிவு என்பதன் சோகம் வலி என்ன? என்பதை
உன்னால் உணர்கிறோம்!
ஆண்டுகள் பல தொடர்ந்த எம்நட்பு
மீண்டும் வாராதோ என ஏங்கும் தனிமை
ஆறுதல் சொல்ல ஆளில்லா வெறுமை
மாறாத உந்தன் மாசற்ற அன்பை
பேறாக பெற்ற நான், பெருமை கொள்கிறேன்.
— நண்பர்கள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

