ஆறுதல்

மரண அறிவித்தல்

சபாநாயகம் தேவானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சபாநாயகம் தேவானந்தன்

பொறியியலாளர் வணிக முகாமையாளர் - Sahid Sendiriyan Berhad, Brunei

வயது 602 ஜூன், 1958 – 13 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
கரவெட்டி
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி மத்தி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடா, Brunei ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சபாநாயகம் தேவானந்தன் அவர்கள் 13-04-2019 சனிக்கிழமை அன்று Brunei இல் காலமானார்.

அன்னார், சபாநாயகம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி தேவசேனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குமுதினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கோசலை அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற யோகானந்தன், மற்றும் கமலினி(கனடா), நந்தினி(கனடா), குகானந்தன், மாதினி, காலஞ்சென்ற சதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுந்தரராஜன்(கனடா), சகுந்தலா(கனடா), காலஞ்சென்ற மகாதேவன், மற்றும் கலாதேவி, அமிர்தலிங்கம், சியாமளா(இங்கிலாந்து), சிவசிதம்பரம்(சிங்கபூர்), குருபரன்(இங்கிலாந்து), இளவேந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி பராசக்தி, மனோன்மணி, மகேஸ்வரி மற்றும் கமலேஸ்வரி, காலஞ்சென்றவர்களான வேலாயுதம், பஞ்சபாக்கியம் மற்றும் செல்வவிநாயகம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், பொன்னம்மா, கணேசநாயகம், சிவானந்தநாயகம், செந்திநாயகம் ஆகியோரின் பெறாமகனும்,

யோகமூர்த்தி, சிவலோஜினி, கலைவாணி, வித்தியா ஆகியோரின் அன்புச் சகலனும்,

உமாவேணி, கலைவாணி, அமலன், அபயன், ஆதித்தன், ஸ்ரீபரன், ஸ்ரீபரணி ஆகியோரின் அன்பு மாமாவும்,

கஜாஜனன், வைகுந்தன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம், வெங்காய வயல்கள், மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த கரவெட்டியில் 02-06-1958 இல் சபாநாயகம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் தேவானந்தன் அவர்கள் யோகானந்தன், கமலினி, நந்தினி, குகானந்தன், மாதினி, சதானந்தன் ஆகிய உடன் பிறப்புடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.

மேலும் அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் திருமணம் முடித்து வைக்க எண்ணிய பெற்றோர் கந்தசாமி தேவசேனா தம்பதிகளின் அழகுப் பெண்ணான குமுதினி அவர்களை திருமணம் முடித்து வைத்தனர். இவர்கள் இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து கோசலை எனும் அன்பு நிறைந்த பிள்ளையைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் வாழ்வில் நற்பண்பும், ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார். அதாவது பொறியியலாளர் வணிக முகாமையாளராக உழைத்தவர். குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.

இவ்வாறு மனைவி,பிள்ளை என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 13.04.2019 இல் 60 வயதில் Brunei இல் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

"கரவெட்டி மைந்தனே
கலங்கா உள்ளமே
பாச உறவே
பார் போற்றும் நண்பனே
அன்பு அப்பா
பிரிவை எண்ணி
ஆலயம் மறந்து
அழுது புலம்புகிறோம் "

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.