மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாபதி வடிவேலு
வேலழகன் இரும்புத் தொழிற்சாலை
வயது 903 அக்டோபர், 1928 – 25 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- ஊரெழு
- வாழ்ந்த இடம்
- ஊரெழு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரெழு மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி வடிவேலு அவர்கள் 25-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஊரெழுவை சேர்ந்த காலஞ்சென்ற சபாபதி, சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரனும், காலஞ்சென்ற வினாசித்தம்பி, துரையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மணியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மணிவேலழகன், அன்பழகன், மெய்யழகன், மதியழகன், முத்தழகன், அருளழகன், குமரழகன், பரிமேலழகன், வேல்விழி, மலர்விழி, பொன்னழகன், கயல்விழி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லோமாவதி, சசிதேவி, வஜீரா, சசிசாந்தி, குமுதினி, இந்திரா, ரஜனி, கோகிலநாதன், விக்கினேஸ்வரன், தர்மினி, நடேசலிங்கம் காலஞ்சென்ற யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, சண்முகநாதன் மற்றும் மகேஸ்வரன், புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராசபாக்கியம், உதயச்சந்திரன், குணசேகரம் மற்றும் சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகிழரசி, நிஷாந்தினி, நாகவிபூஷன், பத்மவிதுஷன், தெய்வீகன், அபிராமி, ஆர்த்தீபன், நர்த்தனா, கவின், ஆரணி, ஜனனன், ஜனனி, பரவிந்தன், பவித்திரா, பால்ராம், யதுஷன், யதுஷா, சேனுசன், லக்ஸனா, கார்மேகன், கஜமேகன், ஐங்கரி, ஐஸ்வரி, ஐந்தூரி, தாமிரன், ஹரிணி, கிருஷ்ணி, பிரணவன், பாலவன், பிருதுவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
லபிநயன், அக்ஷயன், பிரசன்யா, டிலானா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08-30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று ஊர்வலமாக அவரது பாரியாரின் முத்துமணி மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுபின்னர் ஊரெழு பொக்கனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், நெல்வயல் புகையிலைத் தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த ஊரெழு மேற்கில்03-10-1928 இல் சபாபதி சின்னம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் வடிவேலு அவர்கள் கதிரவேலு, சண்முகநாதன், மகேஸ்வரன், புவனேஸ்வரி ஆகிய உடன் பிறப்புடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
மேலும் அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் திருமணம் முடித்து வைக்க எண்ணிய பெற்றோர் வினாசித்தம்பி துரையம்மா தம்பதிகளின் அழகுப் பெண்ணான மணியம்மா அவர்களைத் திருமணம் முடித்து வைத்தனர், இவர்கள் இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்ததன் பயனாக மணிவேலழகன், அன்பழகன், மெய்யழகன், மதியழகன், முத்தழகன், அருளழகன், குமரழகன், பரிமேலழகன், வேல்விழி, மலர்விழி, பொன்னழகன், கயல்விழி போன்ற அழகுப் பிள்ளைகளைப் பெற்று அன்பாகவும் பண்பாகவும் வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் வேலழகன் இரும்புத் தொழிற்சாலை நிறுவி பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து பிரபலம் மிக்க தொழிலதிபராக நிகழ்ந்து மதிப்புகளையும் பெற்றார், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 25.04.2019 இல் 90 வயதில் ஊரெழுவில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
எங்கள் தெய்வமே
......அன்பு உருவமே
கருணைக் கடலே
......கலங்கா உறவே
தொழில் அதிபரே
.....தூங்கா உழைப்பாளியே
காலம் உள்ளவரை
.....மறந்திடா ஊரெழு
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

