1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சகுந்தலாதேவி சுந்தரலிங்கம்
வயது 5623 ஆகஸ்ட், 1959 – 26 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சகுந்தலாதேவி சுந்தரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கடவுளாக கிடைத்த பொக்கிஷத்தை தொலைத்து
இன்றோடு பன்னிரு மாதம்!!!
அம்மா! நெஞ்சமெல்லாம் உங்கள் நினைவுகளை சுமந்தபடியே
எம் நாட்கள் மீளுகின்றது!
இப்போது உங்களுக்கு வலிகள் சொந்தமில்லை
என்ற எண்ணமே எங்களை வாழச்சொல்கின்றது
இதயச்சுவர் எங்கும் உங்கள் மூச்சுக் காற்று வீசிச் செல்ல
உங்கள் உதட்டோர சிரிப்பின் வண்ணங்களோடு கடந்து செல்கின்றோம்
உங்களுக்கு துணையாய் உன்னவன் உற்று இருக்க
கவலை மறக்க முயலுகின்றோம்!
இரவு பகல் எப்பொழுதும் உங்கள் கதைகள் பேசி
எங்கள் வாழ்க்கை நகர்ந்தோட
உங்களை எண்ணியபடியே எங்கள் ஜீவன் சுமக்கின்றோம்
உங்களை ஒரு நொடி மறந்திருக்க முடியவில்லை
உங்கள் சரீரம் மட்டுமே சாய்ந்து கொண்டது
உங்கள் தீண்டல்களை தான் எந்நேரமும் கேட்டு
எங்கள் ஆவி நச்சரிக்கின்றது!!
இங்கு நீங்கள் இல்லா நாட்கள் நரகமாகிப் போகவே
ஏக்கங்களின் வலியின் வழியே நீங்கள் வருவீர்கள் என
தவம் கிடக்கின்றோம்!
எம் நிழல் யாவும் உங்கள் விம்பமாய்
மாறிப்போக நிஜம் மறந்து
நிழலோடு பேசிக்கொண்டிருக்கின்றோம்!
என்றும் உங்கள் பார்வை எம்மை விட்டு அகலப் போவதில்லை
என்ற நம்பிக்கையில் உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளாய்
எல்லோருக்கும், உறுதுணையாய் உங்கள் ஆசிர்வாதத்துடனும்
அறிவுரையின் கீழ் வாழப்போகிறோம்!
இனி எம் வாழ்நாள் பிரார்த்தனையே
உங்களினதும், அப்பாவினதும் ஆத்மா சாந்தி வேண்டி
இறைவனிடம் பிரார்த்திப்பதே...
என்றும் உங்கள் நினைவுகளோடு
ஆண்டு ஒன்றைக் கடந்து விட்ட
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,
சர்மிளா சுதாகரன், கமிலா ரமேஷன்,
மயூலா சுந்தரலிங்கம்,
அனர்ஷன், அகன்விகா, மற்றும் உறவினர்கள்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

