மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாமிநாதர் திருச்செல்வம்
வயது 8218 ஏப்ரல், 1937 – 2 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- மகாறம்பைக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா மகாறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சாமிநாதர் திருச்செல்வம் அவர்கள் 02-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சாமிநாதர், மேரி மாக்ரெட் தம்பதிகளின் அன்பு மகனும்,
ஞானசேகரி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தி(இலங்கை), வசந்தி(ஜேர்மனி), தீபாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ரோசமுத்து, திரேசம்மா மற்றும் மரியநாயகம், காலஞ்சென்றவர்களான சின்ராசு, நேசகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவசுந்தரம்(இலங்கை), பவானந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேவராணி, ஞானமலர், கமலம், செல்லத்துரை, குணம்(சுவிஸ்), செல்வநாயகம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லோஜன், டிலானி(இலங்கை), அம்சகன், அபிசகன், ஓவியா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 03-07-2019 புதன்கிழமை அன்று முதல் 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிவரை இல. 248, பிரதான வீதி மகாறம்பைகுளம் வவுனியா எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியவில் வவுனியா இறம்பைக்குளத்தில் உள்ள அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த நெடுந்தீவில் 18/APR/1937 ஆம் ஆண்டில் திரு.திருமதி சாமிநாதர் மேரிமாக்ரெட்தம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.திருச்செல்வம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் ரோசமுத்து, திரேசம்மா, மரியநாயகம், சின்ராசு, நேசகாந்தன் போன்ற சகோதரங்களுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், ஞானசேகரி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து சாந்தி, வசந்தி, தீபாகரன் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சிவசுந்தரம், பவானந்தன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து லோஜன், டிலானி, அம்சகன், அபிசகன், ஓவியா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் சிறந்த அறிவாளியும் அன்புள்ளம் கொண்டவருமான இவர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன், உதவிகள் புரிவதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 02.07.2019 இல் 82 வயதில் வவுனியாவில் உள்ள மகாறம்பைக்குளத்தில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
நெடுந்தீவு மண்ணின்
நித்திய புன்னகையே
கடுகளவு துயரினையும்
முகத்தில் காட்டாது
வடு வரினும்
வாழ்வில் வெற்றி பெற்று
படு நிலவாய்
விட்டு மறைந்தீரே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

