ஆறுதல்

மரண அறிவித்தல்

சங்கரப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சங்கரப்பிள்ளை பொன்னுத்துரை

இளைப்பாறிய C.T.B சாரதி

வயது 9022 ஜூன், 1928 – 6 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
அரியாலை
வாழ்ந்த இடம்
அரியாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை பொன்னுத்துரை அவர்கள் 06-04-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுபாசினி(இலங்கை), சுபாஸ்கரன்(கனடா), உதயகரன்(நோர்வே), காமினி(சூட்டி- ஜேர்மனி), றோகினி(பொன்னான்- நோர்வே), குமுதினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சரஸ்வதி, கிருஸ்ணசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, சிவறஞ்சினி(கனடா), அமிர்தவர்ஷினி(நோர்வே), விக்னேஸ்வரன்(ஜேர்மனி), விஜயரெட்ணம்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, திருஞானசுந்தரம், சதானந்தன், வீரலட்சுமி மற்றும் கமலாதேவி, பரமேஸ்வரி(நோர்வே), காலஞ்சென்ற அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரிபிரசாத், கார்த்திக், அனுசியா, ஜனனி, நிசானி, கீர்த்தனா, சாகித்தியா, கௌதம், தீபிகா, விநோத், சரன், சஞ்சய் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சுதர்சினி- ஹரிபிரசாத், சுலக்சினி- கார்த்திக் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

பிரணவி, அப்சரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் இல. 49 விபுலானந்தர் வீதியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் அழகான இடமும் மக்கள் செறிந்து வாழும் பகுதியும், நெல்வயல்கள், பயன்தரு மரங்கள் என வளமிகு அரியாலையில் 22-01-1928 இல் சங்கரப்பிள்ளை நாகம்மா தம்பதிகளுக்கு அருமைப் புதல்வனாய் பொன்னுத்துரை அவர்கள் செல்லத்துரை, சரஸ்வதி, கிருஸ்ணசாமி ஆகிய சகோதரங்களுடன் இத் தமிழர் பூமியில் அவதரித்தார்.

மேலும் ஆளுமையும் அறிவும் நிறைந்த இவர் வளர்ந்து உயர் நிலை அடைந்து அழகிய வாலிபனானதும் சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அழகு மகள் சரஸ்வதி அவர்களை திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து சுபாசினி, பாஸ்கரன், உதயகரன், காமினி, றோகினி, குமுதினி எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்தார் CTB சாரதியாக இலங்கையின் பல இடங்களுக்கு சேவை ஆற்றி ஓய்வுநிலை பெற்றதுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்த இவர் உதவிடும் வள்ளலாக விளங்கியதுடன், நகைச்சுவை ததும்ப பேசுவதில் திறமையானவராக திகழ்ந்தார்.

இவ்வாறு மனைவி பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 06-04-2019 இல் 90 வயதில் அரியாலையில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

"அன்பு அப்பா
பாச உயிரே
சேவை செய்வதை
கடமையாக ஏற்று
நல்லதைச் செய்து
நயம்பட வாழ்ந்து
விழிமூடிச் சென்றீர்
விழிகளில் கண்ணீருடம் நாம்"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.