ஆறுதல்

மரண அறிவித்தல்

சங்கீத் சந்திரமோகன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சங்கீத் சந்திரமோகன்

வயது 1418 அக்டோபர், 2004 – 21 ஜூன், 2019

பிறந்த இடம்
பிரான்ஸ்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சங்கீத் சந்திரமோகன் அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சந்திரசேகரம் நல்லபிள்ளை தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, கமலாதேவி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சந்திரமோகன்(வசாவிளான்) நந்தினி(கிளிநொச்சி) தம்பதிகளின் அன்பு புதல்வரும்,

கிருஸ்ணகுமார்- சாந்தி, மகேந்திரன்- சந்திரிகா ஆகியோரின் அன்பு மருமகனும்,

நதுசா, மொணிசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகரத்தினம்- கிருஷ்ணகலா, யோகராசா- கமலேஸ்வரி, பிரகாஸ்- மங்கலேஸ்வரி, சந்திரரூபன்- லோஜினி, கையிலைநாதன்- இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையை பூர்வீகமாகக் கொண்டும் உலகின் அழகியதும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றும் வளர்ச்சி அடைந்த நாடுமான பிரான்ஸில் 18/OCT/2004 இல் திரு.திருமதி சந்திரமோகன் நந்தினி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக செல்வன் சங்கீத் அவர்கள் இவ் அழகு நிறைந்த நாட்டில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் நதுசா, மொணிசா போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து சந்திரசேகரம் நல்லபிள்ளை/கிருஷ்ணபிள்ளை கமலாதேவி போன்றவர்களின் பேரனாக மடிமீது தவழ்ந்து மெல்ல மெல்ல வளர்ந்து மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் அன்புள்ளம் கொண்டவராகவும் செல்லப் பேச்சும், சகோதர பாசம் கொண்டும், படிப்பில் சிறந்து விளங்கியதுடன், பெரியவர்களை மதித்து நடப்பதில் வல்லவராகவும் விளங்கிய இவர் கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு தந்தை, தாய், உறவுகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 21.06.2019 இல் 14 வயதில் பிரான்ஸில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

புன்னகைப் பூ ஒன்று
கண்ணாடி முகம் கொண்டு
கள்ளச் சிரிப்புடன் காட்சி தருகிறது

வண்ணப் பூ ஒன்று-வாடி
வசந்தம் அற்று வீழ்ந்ததே
செல்லப் பேச்சும்
செந்தமிழ் அன்பும்

துள்ளிக் குதிப்பும்
துயர் துடைப்பும்
எண்ணி அழுகிறோம் - இனி
எவர் வருவார் எவர் ஆற்றுவார்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.