ஆறுதல்

மரண அறிவித்தல்

சண்முகம் சாந்தலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சண்முகம் சாந்தலிங்கம்

வயது 7110 ஆகஸ்ட், 1948 – 3 நவம்பர், 2019

பிறந்த இடம்
கொட்டடி
வாழ்ந்த இடம்
நல்லூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் சாந்தலிங்கம் அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

அருந்தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்திமதி(கனடா), சாந்தகுமார்(இலங்கை), சுகந்தி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவீந்திராஜா(கனடா), யாழினி(இலங்கை), யோகன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தர்லிங்கம், மகேஸ்வரி, நாகேஸ்வரி மற்றும் மகாலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அம்பிகாவதி, தம்பிராஜா, ஜெயரட்ணம் மற்றும் ரேணுகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராசுகன், ரசிகா(கனடா), சஞ்சய், சஜீனா, ஆதுளன்(இலங்கை), சஜீந்திரன், அஜீந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தின் கொட்டடியில் புகழ் பூத்த சீமான் திரு. சண்முகம் அவர்தம் பாரியார் பாக்கியம் அவர்களின் அருமைப் புத்திரனாக 10/Aug/1948 ஆம் ஆண்டில் திரு.சாந்தலிங்கம் அவர்கள் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.

சுந்தர்லிங்கம், மகேஸ்வரி, நாகேஸ்வரி, மகாலிங்கம் போன்ற சகோதரர்களுடன் குறும்புகள் செய்து இனிமையாக வளர்ந்த இவர் அன்பு நிறைந்த பெண் அருந்தவமலர் அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்தார். இருவரின் வாழ்க்கையின் பயனாக சாந்திமதி, சாந்தகுமார், சுகந்தி போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ரவீந்திரராஜா, யாழினி, யோகன் என்பவர்களுக்குத் திருமணம் முடித்து வைத்து ராசுகன், ரசிகா, சஞ்சய், சஜீனா, ஆதுளன், சஜீந்திரன், அஜீந்திரன் எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் அன்பும் பண்பும் கொண்ட இவர் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார். அத்துடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கினார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 03.11.2019 இல் 71 வயதில் நல்லூரில் இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

பிற அறிவித்தல்கள்

  1. 4 டிசம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.